1 Comment

பழங்குடிகளுடன் ஒரு நாள் TWA குழுவினர்:

பழங்குடிகளுடன் ஒரு நாள் TWA குழுவினர்: 

Author: கலைவாணி சுப்பிரமணியன்

“நாங்க இப்ப ஒரு அஞ்சு பத்து வருஷமா தான் நல்ல டிரஸ் போட்டுக்கிட்டு,நல்ல சோறு சாப்டுகிட்டு நாகரிகமா இருக்கோம் முன்னாடிலாம் கோவணத்தை கட்டிக்கிட்டு தான் இருப்பாங்க எங்க ஆளுங்க”உங்கள மாறி யாராவது பேண்டு சட்டைலாம் போட்டுக்கிட்டு இங்க வந்தா,எங்க ஆளுங்களாம் பயந்து ஓடி போய் ஒளிஞ்சுக்குவோம்.சாமை,அரிசினு எதோ ஒன்னுல கஞ்சியா தான் காய்ச்சி குடிச்சுக்குவோம் முறையா சமைச்சி சாப்பிடறதெல்லாம் இப்ப கொஞ்ச வருஷமா தான் என்னோட சின்ன வயசுலலாம் அப்டி இல்லை.
இப்ப எங்க தலைமுறைலயும் இருக்க இளவயது பசங்க ஆறு மதம் வயல்ல இறங்கி வேலை செஞ்சுட்டு,அறுவடை எல்லாம் முடிச்சு கொடுத்துட்டு சென்னை,பெங்களூருன்னு கிடைக்கிற வேலைக்கு போய்டுவாங்க வேலை இருக்கும் பட்சத்தில் திரும்ப ஊர் திரும்புவாங்க, வேலைக்கு கூலினுக்கு ஏதும் தர வழக்கம் இல்ல எல்லாரும் சொந்தகாரங்கதான் அவுங்க எங்க வயல்ல வேலை பார்ப்பாங்க,நாங்க அவுங்களோட வேலைக்கு உதவி செய்வோம்.நெல்லு,சாமை,எள்ளு(பேய் எள்ளு ),துவரை இதெல்லாம் தான் இங்க அதிக அளவில் விளைவிக்கிறோம்.இப்போது பொன்னி ரக நெல் போட்டு இருக்கோம்.இது 7 மாத பயிர் ..மகசூல் கொஞ்சம் கம்மியாத்தான் வந்துருக்கு … நாங்க ரசாயனம் எதுவும் போடுறது இல்ல .அதல்லாம் இங்க கிடைக்குறதும் கடினம்,.பெருசா பூச்சி தாக்குதலும் இருந்தது கிடையாது..விதைக்கிறது ,அறுவடை பன்றது தான் வேலை .. இப்பதான் கொஞ்சம் வருடமாக பூச்சி அதிகமாக வந்த கீழே போய் பூச்சி மருந்து வாங்கி கொஞ்சமா அடிப்போம் ..

அப்புறம் மலை சரிவுல வாழை பயிரிட்டு இருக்கோம் ..எந்தவித பராமரிப்பும் இல்ல ..ஆனா நல்ல வந்துரும் …பழம் ரொம்ப ருசியா இருக்கும் …

பெரும்பாலும் வீட்டிற்கு தேவையானவற்றையே விளைவித்து கொள்கிறோம் …இதன் மூலம் குடும்ப வருமானம் வரது கொஞ்சம் கஷ்டம் தான்..அதான் பசங்க வெளியூருக்கு அப்பப்ப கூலி வேலைக்கு போயிட்டு வருவாங்க .. அரசாங்கத்துல இருந்து ஏதும் விவசாயம் சார்ந்த சலுகைன்னு கிடைக்கிறதில்ல,என்னென்ன சலுகைகளும் நாங்க பெற முடியும் னு கூட எங்களுக்கு தெரியல,குழம்புக்கு தேவையான ஒரு மிளகாய் பொடி அரைக்கவோ ,ரேஷன்ல ஏதும் வாங்கணும்னா கூட இங்க இருந்து புதூர் நாடு(உத்தேசமாக 10 கி மீ வரை இருக்கலாம்)வரை மலைப்பாதையில போகனும்,அங்க வரும் வழில மலை உச்சிலை இருக்க நாச்சியம்மன் கோவில் திருவிழா ஏழு நாட்களுக்கு நடக்கும் நாடகம்,நடனம்னு பெரியவங்க சின்னவங்க எல்லாரும் ஆடுவோம் ரொம்ப சிறப்பா இருக்கும்.எனக்கு நீங்க எல்லாரும் இந்த மாறி எங்களோட நிகழ்வுகளை கலந்துக்கணும்,அடிக்கடி இங்க வாங்க,அடிக்கடி எங்க கூட போன்ல பேசுனீங்கனா ரொம்ப சந்தோஷமா இருக்கும் எங்களுக்கு என்ற அன்பு கட்டளையுடன் அவர்களின் வாழ்கை முறையை பற்றிய எங்களின் அடுக்கடுக்கான கேள்விகளுக்கான பதிலையும் மிகவும் ஆத்மார்த்தமாக எங்களுக்கு விவரித்தார். ஜவ்வாது மலையில் உள்ள கீழானூர் மலை கிராமத்தின் தலைவரும் அங்கே ஒருநாள் நாங்கள் தங்குவதற்கு ஏதுவான வசதிகளை ஏற்படுத்தி தந்த ராமன் அய்யா.

அது ஏனோ தெரியவில்லை திட்டமிடாமல் செல்லும் எந்த ஒரு பயணமும் சொதப்புவதுமில்லை,திகட்டுவதுமில்லை. நாசித்துவாரங்களில் தூசி படியச் செய்யும் தீபாவளி என்ற களேபரத்தை இவ்வருடம் மனது நாடவேயில்லை,ஞாயிற்று கிழமைக்கு அடுத்து வரும் திங்கள் கிழமை போல ஒரு வித சலிப்பே தட்டியது.பெரும்பாலோர் ஊருக்கு சென்று இருப்பதால் மதி அண்ணன் அழைத்ததன் பேரில் நமது குழுவில் இருந்து “ஒரு நாள் ஜவ்வாது மலைப்பயணம்” சென்று வரலாம் என திட்டமிட்டோம்…எந்த வித திட்டமிடலும் இல்லாததால் முன்கூட்டியே குழுவில் தெரிவிக்க இயலவில்லை . அடுத்த முறை அங்கு பணியாற்ற குழுவாக செல்வோம் .. ஒரு வழியாக ஒன்று கூடினோம் கோயம்பேடு பேருந்து நிலையத்தில்.
அன்று ஏனோ பேருந்து நடத்துனர்களின் அன்பில் சற்று ஆடி போனோம்.திருப்பத்தூர் வரை பேருந்தில் நண்பர்களின் கும்மாளமும்,பாட்டும் செம ரகளை.நடத்துனர் எங்கள் மேல் எதையும் நடத்தவில்லை.13 டிக்கெட்னா சும்மாவா?
திட்டமிட்ட நேரத்திற்கு முன்னதாகவே திருப்பத்தூர் சென்றாகிவிட்டது.அங்கிருந்து மலைப்பகுதிக்குள் செல்லும் பேருந்தில் இடம் பிடித்து தந்த கணேஷ் தோழன் ஒரு நிமிடம் ஓசோன் உயரத்திற்கே சென்று விட்டார்..அதற்காக பேருந்தில் ஒரு ஆயாவிடம் வாங்கி கட்டிக்கொண்டது தனி கதை(ஹா ஹா)அதற்கும் அயரவில்லை அண்ணன் தனது இருக்கையை இன்னொரு ஆயாவுக்கு தாரை வார்த்து கொடுத்து நல்ல பெயர் வாங்கிவிட்டார் என்றென்றும் “பெண்களின் காவலன் “என்றால் கணேஷ் அண்ணனே!
மலைப்பகுதி சாலையில் அத்துணை கொண்டை ஊசி வளைவுகள் (hairpin bends),பனி சூழ்ந்த விளை நிலங்கள்,கிழக்குதிசையில் ஒரே ஒரு செங்கீற்று சூரியனை முழுவதும் உதிக்க அனுமதிக்காத மேகங்கள்,இத்தகைய கொள்ளை அழகினை ரசிக்க எங்களுக்கு அன்று கொடுப்பினை இருந்தது.
புதூர் நாட்டிலிருந்து ஷேர் ஆட்டோவில் பயணம்
“புதிய வானம்
புதிய பூமி
எங்கும் பனி மழை பொழிகிறது”பாடலுடன் குதூகலப்பயணம் .
நாங்கள் அன்று தங்க வேண்டிய கீழூர் கிராமம் வந்தது.எங்களின் இந்த பயனத்திற்கு முழுமுதற் காரணமான மதி அண்ணண் எங்களை அழைத்துச் செல்வதற்காக வந்திருந்தார், இறக்கமான பாதையில் 15 நிமிட பயணம்,தான்தோன்றியாக வளைந்து கிடந்த கொய்யா,மாதுளை,சீதா,நெல்லி மற்றும் இலைகளை விட அதிக எண்ணிக்கையில் காய்ந்திருந்த பலா மரங்கள் இன்னிக்கி ஒரு வேட்டைதான் என வாய்க்குள் முணுமுணுத்துக்கொண்டோம்.மதி அண்ணனின் வீடு இரண்டு நாய்க்குட்டி,ஆடு,மாடு,கோழிகள்,அம்மா,அப்பா,அண்ணன்,அக்காள்,சந்தோஷ் குட்டி,திருநிறைச்செல்வி என ஒரு பெரிய கூட்டுக்குடும்பம் சிரித்த முகமாக வரவேற்றனர்.போனவுடன் ஒரு பெரிய பலாப்பழத்துடன் வாய்ச்சண்டை கைச்சண்டை(பின் குறிப்பு யாரும் பல்லு துலக்கல ).அதன் பின்னர் வைக்கோல் போர் வேய்வதற்கு ஏதுவான மூங்கில் மரங்களை காட்டிற்குள் இருந்து கொண்டு வந்தோம்.நெல் மற்றும் சாமையின் தாள்களை கொண்டு வைக்கோல் போர் போடுவதற்கு உதவினோம்.
அங்குள்ள பழங்குடிகளின் வாழ்க்கை முறை,விவசாய முறை,பாரம்பரிய விதைகளின் சேகரிப்பே பயணத்தின் முக்கிய நோக்கமாக இருந்தாலும்
வைக்கோல் போரில் விளையாட்டு
பல்லு துலக்காம பலா பழம் சாப்பிட்டது
உரலில் மாவு இடித்தது
இளநீர் குடித்தது
கவன் குச்சியில் சிலம்பம் கத்துக்கொண்டது
அதிரசம்,பலா கொட்டை அவியல் சாப்பிட்டது
ஆற்றில் குளிப்பதா?கிணற்றில் குளிப்பதா என்ற முடிவெடுக்க toss சுண்டியது
மதிய உணவாக நாட்டு கோழி சாப்பாடு
மறந்த தமிழ் விளையாட்டுகளை ஒன்றன் பின் ஒன்றாக நண்பர்களுடன் நினைவு கூர்ந்தது
குலை குலையாய் முந்திரிக்காய் விளையாட்டு விளையாடியது
எழுபது கோவிந்தன் தாத்தாவினை “என்னை கட்டிக்கீறீங்களா”என வம்புக்கு இழுத்தது என ஒரே கேளியும்,கிண்டலுடன் சிறப்பாக பொழுது போனது.
மாலை நேரத்தில் ஊருக்குள் விவசாயிகளை சந்தித்து வர சென்றோம்.மடுமுழுங்கி,பேய்எள்ளு என்ற புது வகை பயிரினை பற்றி அறிந்து கொண்டோம்.சிறிதளவு விதைகளும் சேகரித்து கொண்டார்கள் நண்பர்கள்.பின் சீனீ மிளகாய், சோம்பு செடி, கொத்துச்சாமை,துவரை,பண்ணைக்கீரை,கடுக்காய் என கண்ணில் பட்ட அனைத்து பயிர்களைப் பற்றியும் வழிகாட்டியாய் வந்த மதி அண்ணன் உதவியுடன் தெரிந்து கொண்டோம்.நன்றாக இருட்டி விட்டது அடர்ந்த காட்டுப்பகுதியில் நடக்கிறோம் என்ற அச்சம் சிறிதும் அல்ல ஒரே நாளில் அவ்வளவு பரீட்சயம் ஆனது அந்த பாதைகள்…
பிரியும் தருணம் வந்தது
அத்தகைய அன்பானவர்களையும்,அந்த அழகான சூழலையும் விட்டு பிரிய மனமில்லைதான் என்ன செய்வது?
பிறிதொரு சமயத்தில் நிச்சயம் வருவாதாக கூறி விடைபெற்றுக்கொண்டு
நரகத்தை
Sorry
நகரத்தை
நோக்கி பயணித்தோம்.

 

11225402_1217362848321447_4372133961617839848_n 14572435_1217362888321443_2594562826793644110_n 14937315_1217363911654674_1231218647296871682_n 14947834_1217363498321382_7584267436136904344_n 14947911_1217363434988055_1199384415299987870_n 14956563_1217362641654801_5074679963760466985_n 14962752_1217363538321378_6874289905947801981_n 14963371_1217363748321357_4173664240842732674_n 14991965_1217364521654613_5371204269888406364_n

Our  Team:

14900539_1217364558321276_2537695974410312295_n 14991846_1217362991654766_3151448803591429345_n

Advertisements

One comment on “பழங்குடிகளுடன் ஒரு நாள் TWA குழுவினர்:

  1. Nice post, visting and photos. I’d like to join starting from December. Please keep me posted at: zeru.pianojack@gmail.com

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: