Leave a comment

TWA featured in DD Podhigai – Pudhiyadhor Ulagam Seivom

 

ஒரு தலைமுறை வேளாண்மையை விட்டு வெளியேறும் போது இன்னொரு தலைமுறை அதனை ஈடு செய்ய வேண்டும் ….நுகர்வு கலாச்சாரத்தின் மோகத்தாலும், அரசின் பொறுப்பற்ற தனத்தாலும் ,பருவநிலை மாற்றங்களாலும் கடந்த 10 ஆண்டுகளாக வேளாண்மையை விட்டு வெளியேறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது… நெற்கட்டுகளை சுமந்த தலைகள் இன்று செங்கற்களை சுமக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டு விட்டோம் …இன்று வேளாண் நிலங்கள்,செங்கற்சூளைகளாக மாறி வருகிறது என்பதே நிதர்சனம் .. நிலத்தில் கடந்த 40 ஆண்டுகளாக விரக்தியில் வேளாண்மையை விட்டு வெளியேறிய உழவர்கள் இன்று நகரத்தில் காவலாளிகளாக ,கூலிகளாக வேலை செய்து வருகின்றனர் … ஒரு உழவனின் தற்சார்பு வேளாண்மையை அழித்து அவர்களை கடனாளியாக்கி தற்கொலைகளுக்கு உட்படுத்தியத்தியதும் ,நிலத்தை விட்டு வெளியேற்றியதும் தான் வேளாண் கொள்கைகளை மேம்படுத்துவதாக கூறும் வேளாண் கல்லூரிகளின் ,அரசுகளின் அதிகபட்ச சாதனையாக கருத இயலும் …. ஒட்டு வாங்கி அரசியலுக்காகவே இன்னும் அரசியல்வாதிகள் உழவர்களை ஒரு கருவியாக பயன்படுத்தி வருகின்றனர்.வேளாண்மைக்கு தொடர்பே இல்லாத பெரும் நிறுவனங்கள் எல்லாம் இன்று நமது உணவு உற்பத்தி முறையை தங்களின் வியாபாரத்திற்காக கையில் எடுத்திருக்கும் போது நம் உணவினை நாமே உற்பத்தி செய்து கொள்வதற்கான நெருக்கடிகளுக்கு தள்ளப்பட்டு உள்ளோம் …

வேளாண்மையில் இன்று ஆட்கள் பற்றாக்குறை என்பது மிகப்பெரிய பிரச்சனையாக கருதினாலும் ,அதற்க்கு பல்வேறு காரணங்கள் கூறும் அதே நேரத்தில், காலம் காலமாக ஒரு பிரிவினரே வேளாண் தொழிலில் வேலை ஆட்களாக ஈடுபட்டு வந்த போது ,அவர்கள் இன்று அதில் இருந்து விடுபட்டு அடுத்த நிலைக்கு செல்வதை நாம் ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும் …இன்னும் எத்தனை காலம் உழைப்பு சுரண்டலுக்கு குறிப்பிட்ட பிரிவினரே உட்படுவார்கள் என்பதையும் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்… வள்ளுவன் கூறியது போல் “எல்லாவற்றிற்கும் முதன்மையானது உழவு தொழிலே”வயிறு என்ற உறுப்பு இருக்கும் வரை மனிதனால் உழவு தொழிலை கைவிட இயலாது ….ஆக உணவு என்பது எல்லோருக்கும் அடிப்படையான ஒன்றாக இருக்கும் போது வேளாண்மையில் நம் அனைவரின் பங்களிப்பும் அவசியமானது …முக்கியமாக இளம் தலைமுறையினரின் பங்களிப்பு …

அதன் ஒரு முயற்சியாகவே கடந்த 3 வருடங்களாக பல்வேறு நபர்களையும் ஒருங்கிணைத்து ,அமைதிகளற்ற நகர சூழலில் இருந்து விடுபட்டு ,கிராமம் நோக்கி உழவர்களிடையே ஒரு தன்னபிக்கையை அளிக்கும் விதமாக நமது உழைப்பினை வார இறுதி நாட்களில் வேளாண்மை சார்ந்து இயங்கி வருகிறோம் …புது சூழலுடன் புதிய நபர்களின் நட்புகள் ,ஒத்த சிந்தனை கொண்ட மனிதர்களின் தொடர்புகள் ,எல்லாவற்றிக்கும் மேலாக நம் தட்டில் வரும் உணவிற்கு பின்னர் உள்ள உழைப்பினை,ஒரு உழவரின் தினசரி பிரச்னையை ,ரசாயன வேளாண்மையில் உள்ள பாதிப்பினை அறிந்து கொள்வதற்கு ஒரு படிநிலையாகவே இதனை கருதுகிறோம் ..நாட்டின் பெருவாரியான உணவு சிறு குறு விவசாயிகள் மூலமே உற்பத்தி செய்ய படுகிறது .அவர்களோடு இணைந்தே நமது பெரும்பாலான செயல்பாடுகள் செயல்பாடுகள் அமைந்து வருகின்றன ..அய்யா நம்மாழ்வார் உள்ளிட்ட பல்வேறு மனிதர்களின் பெரும் அனுபவத்தை உள்வாங்கி கொண்டு செயல்படும் இந்த பெரும்பயணத்தில் தொடர்ச்சியான தன்னார்வாளர்களின் ஆதரவுகள், மேலும் தொடர்ந்து செயல்படுவதற்கான தன்னப்பிக்கையை அளிக்கிறது.தொடர்ச்சியாக செயல்படுவோம் .எல்லோருக்கும் நன்றிகள் …

TWA குறித்தான ,அதன் செயல்பாடுகள் குறித்தான ,பங்களிப்பவர்களின் கருத்துடன் கூடிய காணொளி .

– தமிழ்ச் செல்வன்

நன்று : பொதிகை தொலைக்காட்சி

நன்றி : Prabhu mj

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: