1 Comment

Part 2 – Volunteering Event at Cuckoo Forest School – July 22nd

Here what கலைவாணி சுப்பிரமணியன் has to say about her experience at Cuckoo forest school. You can read others experiences at out part 1 post

கலைவாணி சுப்பிரமணியன்

கடந்த ஒரு வருட காலமாக TWA (தி வீக்கெண்ட் அக்ரிகல்ட்டரிஸ்ட் )அமைப்பினரை முக நூல் மூலமாக தொடரும் வாய்ப்பு கிடைத்தது அவர்கள் சென்னை மற்றும் அதற்க்கு அருகாமையில் உள்ள விவசாயிகளுக்கு வார இறுதியில் உதவுவதை முழுவீச்சில் செய்து வருபவர்கள் ,விவசாய குடும்பத்தில் பிறந்து வளர்ந்த எனக்கு அந்த அமைப்பினருடன் சேர்ந்து பணியாற்றுவது கடினமாக இருக்காது என தோன்றியது கடந்த மார்ச் மாதம் TWA அமைப்பினருடன் ஆலத்தூர் என்ற கிராமத்தில் மல்லிகை பூ பறித்தல்,பச்சை பயறு எடுத்தல் போன்ற வேலைகளை அந்த ஊரை சார்ந்த விவசாயிகளுடன் செய்து முடித்தோம்.நண்பர்கள் ரசாயனம் அல்லாத இயற்கை விவசாயத்தின் பயன்களை பற்றி விவரித்தனர், அதன் பின்னர் அதே ஊரை சார்ந்த மிக இளம் விவசாயியான திரு.நித்தியானந்தன் தோழரின் “நல்ல கீரை”பண்ணையை சுற்றி பார்த்தோம்,புதிய அனுபவமாக அன்றைய தினம் அமைந்தது ,முழுமையான முதல் நிகழ்வயிற்றே! அதனால் அப்படி ஒரு மகிழ்ச்சி மனதில்.

TWA அமைப்பினருடனான எனது இரண்டாவது பயணம் இரண்டு நாட்களுக்கு தேவையான பொருட்களுடன் ஆயத்தமாக “குக்கூ” வை நோக்கி சுமார் 30 தன்னார்வல நண்பர்களுடன் கடந்த வரம் ஜூன் 22ம் தேதி கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து பயணித்தோம் திட்டமிட்டபடி எங்களது விடியல் குக்கூ அமைந்துள்ள ஜவ்வாது மலையின் வனச்சரக அலுவலகம் முன்பாக விடிந்தது அங்கிருந்து புத்துணர்ச்சி மிகுந்த மலைக்கற்றை அனுபவித்தவாறு ஒரு சிறிய வாகனம் மூலம் பயணித்தோம் வழிநெடுக அதுவரை கண்ட கண்டிராத மரங்கள்,பறவைகளை பற்றிய உரையாடல் நண்பர்களிடையே.இருபது நிமிட பயனத்திற்கு பிறகு குக்கூ வை அடைந்தோம்.பாரதிராஜா படத்திலும் இயற்கை ஓவியங்களில் மட்டுமே பார்த்த சூழலை அன்று தான் நேரில் பார்க்க நேர்ந்தது.தேஜாவு தருணம் போல ஆம் நாம் கனவில் கண்ட ஒரு சூழலை நேரில் பார்க்க நேர்ந்தால் அப்படி தான சொல்லனும்,சின்ன வயசுல நாமல்லாம் படம் வரைய சொன்னா என்ன செய்வோம் “இரண்டு மூன்று மலை போன்ற ஒரு அமைப்பு அதன் நடுவே ஒரு சூரியன் உதுப்பது போன்றும் அதனருகே ஒரு நதி போன்ற அமைப்பும் நதிக்கரையில் ஒரு குடில் போன்ற அமைப்பிலான வீடும் “வரைந்த அனுபவம் நாம் எல்லோருக்கும் இருந்திருக்கும்,அப்படி தான் இருந்தது குக்கூ கட்டுப்பள்ளியின் எழில்மிகு தோற்றம் மலைகள் சூழ,நதிக்கு அருகாமையில்.

குக்கூவின் இனிய வரைமுறைகள் எங்களை வெகுவாக கவர்ந்தது அங்கே ரசாயனம் கலந்த பொருட்களை யாரும் உபயோகிக்கவில்லை பற்பசை கூட யாரும் உபயோகிக்கவில்லை,மண்ணாலான குவளைகளில் பால் கலக்காத தேநீர்,காலை உணவாக கேழ்வரகு கூழ் வடிவாம்பாள் பாட்டி அன்புடன் பரிமாறினார்,அன்றய தினம் முதல் நிகழ்வாக அங்கே அமைந்திருந்த புளியமரத்தின் அடியில் கலந்துரையாடலுக்காக அனைவரும் அமர்ந்தோம் அவரவர் தத்தம் அவர்கைளை அறிமுகபடுத்தி கொண்ட பின்னர் எளிமையின் மறு உருவமாக திகழும் சிவராஜ் அண்ணண் பேச தொடங்கினார் அவர் பேசி முதல் முறையாக கேட்கும் எனக்கு ஒரு நிமிடம் உடல் சிலிர்க்கவே செய்தது அவர் பேசியதாவது:குக்கூ ஒரு கேளிக்கைகான இடமோ,கொண்டாடுவதற்கான இடமோ இல்லை என்றும் இந்த சூழலை ஆத்தமர்த்தமாக உணருங்கள் என்றும் அங்கு உள்ள பாட்டி,நேசன்,ஜான்,முத்து ,காளி இவர்களின் வாழ்க்கையின் பின்புலம் பற்றியும் அவர்கள் கடந்து வந்த கடினமான பாதைகள் பற்றியும் அவர்களிடமிருந்து நாம் நிறைய கற்றுக்கொள்ள வேண்டுமென்றும் கூறினார்.பின்னர் “குக்கூ காட்டுப்பள்ளி” ஆசீர்வதிக்க பட்டவர்களை மட்டுமே இந்த இடம்அனுமதிப்பதாகவும்,,ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் மட்டுமே இங்கு வாழ்கிறார்கள் என்றும் கூறி அந்த இடத்தின் உன்னதத்தையும் மேன்மையையும் கூறி முடித்தார்.பின்னர் அன்றைய தினம் நாங்கள் எந்த மாதிரியான வேலைகளை செய்ய வேண்டுமென்ற குறிப்பினையும் கொடுத்து வழி நடத்தினார்.

ஜென் கார்டன் அமைப்பதற்காக சிறிய அளவிலான கற்களை நண்பர்கள் கைமாற்று முறையில் ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு எடுத்து சென்றோம்,இடையிடையே உப்பில் ஊறிய நாவல் பழங்களை பாட்டி கொடுத்தனுப்பினார். பின்னர் தாயின் கருவறை போன்ற அமைப்பில் அமைக்கப்பட்ட மூலிகை தோட்டத்திற்கான பாத்திகளை அமைத்தோம்,சிறுது கடினமான வேலையாக இருந்தாலும் நண்பர்களுடன் அயராமல் செய்து முடித்தோம்.
அன்று மாலை குளிப்பதற்காக ஓடைக்கு சென்றோம் “என் புது சிறகு என்னை கேட்காமலே முளைத்துக்கொண்டது” ஒரே ஆட்டம் தண்ணில,சினிமா ல வர்ற எல்லா heroine introduction songs ம் எனக்காக எழுதப்பட்டது போல ஒரு உற்சாக உணர்வு என்னனு சொல்ல தெரியலை.

பின் இரவு அன்றைய முக்கியநிகழ்வாக (Campfire : சுடரொளிக் களியாட்டம்)இரவு உணவிர்கு பிறகு ஒன்று கூடி அமர்ந்தோம் TWA அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் என்ற முறையில் தோழர் தமிழ்ச்செல்வன் TWA எதற்காக தொடங்கப்பட்டது என்று கூறினார் விவசாயிகளின் முதல் தேவை ஆள் பற்றாக்குறை என்றும் பண உதவியோ பொருள் உதவியேயன்றி உழைப்பை ஏன் தர கூடாது என்ற மாற்று சிந்தனை தான் இந்த அமைப்பின் நோக்கம் எனவும்,சிறு,குறு விவசாயிகளின் முக்கியத்துவம்,குறைந்த விலையில் சாகுபடிக்கான வழிமுறைகளை விவசாயிகளுக்கு வழங்குதல்,விவசாயம் சார்ந்த வல்லுனர்களின் தொடர்பினை மற்ற விவசாயிகளுக்கு ஏற்படுத்தி தருதல்,இயற்க்கை விவசாயம் சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல்,கிராமம் சார்ந்த சூழலில் புதிய மனிதர்களுடன் பழகுவதற்க்கான ஒரு வாய்ப்பினை இன்றைய இளைஞர்களுக்கு வழங்குதல் என அந்த அமைப்பின் சிறப்பம்சங்களை அருமையாகவும்வி,எளிமையாகவும் விளக்கினார் அதைனை தொடர்ந்து தோழர்கள் ராஜேஷ்,சரத்,ஜனகன் இயற்க்கை விவசாயம் சார்ந்த கேள்விகளுக்கான பதிலையும்,புரிதலையும் எங்களுக்கு தந்தார்கள்.நம்மாழ்வார் அவர்கள் இயற்க்கை விவசாயத்திற்காக விதைத்து சென்ற வீரிய வித்துக்கள் இவர்கள் தாம் போலும்.அதன்பிறகு சிவராஜ் அண்ணா நம்மாழ்வார் பற்றிய பல நிகழ்வுகளையும்,உதாரணங்களையும் பெருமிதத்துடன் விவரித்தார் ஆனால் சிவராஜ் அண்ணா அவர்கள் ஒரு மணி நேரம் பேசினாலும் மாண்டியிட்டு கொண்டு தான் பேசினார்.அன்றன்றைய இரவு தோழிகளுடன் உறங்கையில் பயத்தில் கூச்சலிட்டு அனைவரையும் தூங்க விடாமல் தொல்லை செய்தது தனி கதை(மன்னியுங்கள் ரேவதி ,தேவி).

குக்கூவில் ரம்மியமான இரண்டாவது நாள்:புது மண தம்பதிகளை கவனிப்பது போல வேளைக்கு சாப்பாட்டிற்க்கு குறைவே இல்லை.அன்று சிவராஜ் அண்ணா உடன் மலைமலைப்பகுதிக்கு விதைகள் வேட்டையாட சென்றோம் வழியே நீர் மருது மரத்தின் சிறப்பினையும் வயதினை கணிப்பதில் ஒரு நண்பர்களுக்குள் ஒரு உரையாடல்,இறுதியாக சிறதளவேனும் சேகரித்த விதைகளோடு கூடாரம் வந்து சேர்ந்தோம்.கிளம்ப வேண்டும் என்றதும் மனதில் ஒரு இனம் புரியாத கலக்கம் தொற்றி கொண்டது .சிவராஜ் அண்ணன் அவர்கள் அந்த சோகத்தை மறக்க செய்வது போல தும்பியின் இரண்டாவது இதழை பரிசாக கொடுத்தார் .திரும்ப மனம் மாறுவதர்குள் அனைவரிடம் விடைபெற்று கிளம்பிவிட்டோம்.

பயனுள்ள இரண்டு நாட்கள்
நன்றி
TWA ….
Cuckoo….

Group Selfie

13686663_1133558076701925_4619587851926574435_n

Even Monkeys admiring the mountains:

13686721_1133559570035109_10582810975426553_n

Pebble Labels:

13782062_1133557700035296_7397751852085351498_n

Creativity

13873181_1133557536701979_5969916583631855781_n

 

This is called “SHY” How many know this?

13892128_1133557833368616_1513742514867598144_n

At last a pose 🙂

13882152_1133557820035284_4830232515233321789_n

When was the last time you water splashing?

13886406_1133559586701774_6031703903859118600_n

13887103_1133557276702005_6515402965527166754_n
13895118_1133557036702029_1065419120753458535_n

 

13900135_1133557093368690_7365529439352170978_n

Advertisements

One comment on “Part 2 – Volunteering Event at Cuckoo Forest School – July 22nd

  1. super

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: