2 Comments

Volunteering Event at Cuckoo Forest School – July 22nd

This post will be more like a review where our volunteers will share their the experience on the event at Cuckoo forest school which held on July 22nd

Prasanth

விட்டு விடுதலையாகி நிற்பாய்
இந்த சிட்டுக்குருவியை போல்
– தும்பி

ஒவ்வொரு முறையும் குக்கூ காட்டுப்பள்ளிக்குச் சென்று
வரும் போது, கற்றல் நிகழ்ந்து கொண்டே இருக்கும்.
இந்த முறையும் தெளிவுகளுடன் பயணம் முடிந்துள்ளது.
குழந்தைகளின் இயல்பான வெளிப்பாடுகளில் துவங்கி,
ரமேஷின் அற்புத படைப்புகள், சிவராஜ் அண்ணனின்
தெளிவான உரை, நண்பர்களுடன் உரையாடல்,
ஜான் அண்ணனின் பயணக்குறிப்புகள், இறுதியில்
தும்பியின் வாசிப்பு என நிறைவான ஒரு பயணம்.
தும்பியின் இரண்டாவது இதழ் அற்புதமாக உள்ளது.
சிட்டுக்குருவியின் வருகைக்காக ஏங்கும் மலை,
மலையின் ஏக்கத்தை பூர்த்தி செய்யும் சிட்டுக்குருவி
என இயற்கையின் அதி அற்புத இயல்பை வெளிப்படுத்தியுள்ளது
தும்பி.

குக்கூ.. எனக்கான சுதந்திர உலகம்..
அந்த உலகத்தில் கற்றுக்கொள்ள வேண்டிய
எண்ணற்றவையை நோக்கி இந்த முடிவற்ற
பயணம் தொடர்ந்து கொண்டே இருக்கும்..
‪#‎குக்கூ_காட்டுப்பள்ளி‬

Balamurali Krishnan

‘India’s best ideas have come where man was in communion with trees and rivers and lakes, away from the crowds’ Tagore

Cuckoo Forest School is one such place where nature is overwhelmingly aplenty. one could sit quietly watch the clouds passing over the mountain range, stroll through the jawadhu hills forest, lie down in the slowly running stream and be with the children to know what is it to live life to the fullest.

One of the best Volunteering experience organized by TWA.

Peter annan of Cuckoo forest school says-

Cuckoo forest school is the outcome of G.Nammalvar’s longtime dream of an education which puts the humanity at the centre.

Cuckko’s idea is to give a holistic education which will allow children to explore anything in life from cradle to grave.

Here a child can become an astro-physicist, a farmer, a rag-picker (waste recycling), a grave digger, a linguist or anything in this world. the important thing is to allow the children to discover their own innate interest and passionately pursue them.

The school’s core belief comes from Nammalvar’s ideology of self sustainable life. a child will learn to stitch its own clothes, will learn to make everything for its own needs. since they do everything hands on from the beginning, they rough it out and learn them well. so in a way they learn all the skills they need for the adulthood and survival while living and playing.

Sivaraj of Cuckoo forest school says-

The root cause of every problem today is education.

An education in fragments has made all of us to think in fragments. we think society as a different being from each one of us without realizing we are the same. if society is cruel and corrupt so are we.

Education has merely ended as an Intellectual activity rather than transforming a child in to an responsible adult who cares for his immediate environment.

If we can’t bring our-self to stop doing anything that we expect from others how can we blame the govt, system, etc. unless and until we are not happy and content within our self we won’t be able to change anything. if at all there is any meaning to education, this is where it should start with, finding happiness to oneself, and then remaining everything will fall in its place.

(https://en.wikipedia.org/wiki/G._Nammalvar)

Mir Mahamood Ali

Far and away the best prize that life offers is the chance to work hard at work worth doing.Work hard for what you want…Play hard with what you have….

Really I made the most of it volunteering with the “The Weekend Agriculturist”.From the bottom of my heart I would like to thank Sarath anna & தமிழ்ச் செல்வன் anna for having inviting me for this great initiative taken by you guys.Youngsters like you are the hope for a better India tomorrow.
33 restless volunteering souls were present during this event.I personally think they would have made the most of it.Our youngest volunteers was just 12 years old along with her mom from Choolaimedu,Chennai.I really did have a great day with that pal.Apart from volunteering we played a few games early in the morning as soon we arrived to Singarpettai which actually comes under Krishnagiri district.We also went to have view at the lakes surrounded by the forest.Finally I ended up my day with camp fire after our dinner,where we were discussing about many farmers issues.To be quite honest it was not a discussion it was a debate as if we were in the parliament session.

தமிழ்ச் செல்வன் 

குக்கூ காட்டு பள்ளி ..நுகர்வின் விடுதலைக்கான ஓர் நிலம் :
ஜவ்வாது மலையின் அடிவாரத்தில் ஒரு காட்டின் சூழலையும் ,ஒரு கிராமத்தின் தன்மையையும் தன்னகத்தே கொண்ட ஒரு சமவெளி நிலத்தில் அமைந்துள்ளது குக்கூ காட்டு பள்ளி ..இயற்கை வாழ்வியலுடன் கூடிய ஒரு குழந்தையின் சுதந்திரத்திற்கான ஒரு அடித்தளத்தை உருவாக்கும் முயற்சியில் குக்கூ அமைப்பை சேர்ந்த அன்பர்கள் இந்த பள்ளியை உருவாக்கி வருகின்றனர் .நிறைய அன்புள்ளம் கொண்ட தன்னார்வலர்களின் முயற்சியினால் பள்ளிக்கான வேலைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது .

கடந்த வாரம் TWA (The weekend Agriculturist) குழுவில் இருந்து அந்நிலத்தில் எங்களின் சிறிய உழைப்பினை அளித்திட சென்று இருந்தோம்.மனதின் அனுபவங்களை பயண குறிப்புகளாக மாற்றி உள்ளேன்.

சென்னையில் தொடங்கிய பயணம் அதிகாலையில் குக்கூவை அடைந்தவுடன் சிறகுகளற்ற அனைவருக்கும் பறத்தலுக்கான உணர்தலை நிலம் தந்தது .பயணம் ஏற்படுத்திய களைப்பை சிறிய விளையாட்டின் மூலம் போக்கி விட்டு ,காலை உணவான கம்மங்கூழ் அருந்த சென்றோம்.பிறகு அனைவரும் தங்களை அறிமுக படுத்தி கொண்டதுடன், சிவராஜ் அண்ணண் தன் இயல்பான புன்னகையுடன் சில வார்த்தைகள் பேசினார் ..ஒரு பட்டம் பூச்சியில் ஆரம்பித்து ,அங்கு தங்கி பணிபுரியும் தோழர்கள் ,அங்கு துள்ளி விளையாடும் கிராமத்து சிறுவன் வரை எல்லோருக்கும் ஒரு கதை இருக்கிறது ..அதை அறிந்து கொள்ள முயலுங்கள் என கூறினார் ..
பின்னர் அங்குள்ள தோட்டத்தில் குழுவாக எங்களது உழைப்பினை செலுத்தினோம் .புளிய மரத்தின் அடியில் கூட்டாக மதிய உணவு ,உண்ணும் போது குழுவாக சிறு விவாதம் ,குட்டி தூக்கம் ,மாலை பாட்டியம்மா செய்த மொச்சை சுண்டல் என பொழுது சென்று கொண்டு இருந்தது ,பின்னர் குழுவாக குளிப்பதற்கு காட்டிற்கு சென்றோம். மலை சரிவுகளில்,சிறு சிறு பாறைகளின் மீது நீர் வழிந்தோடி கொண்டிருக்க, ஓடையின் நீரை அக்காட்டின் நீண்டு வளர்ந்து இருக்கும் நீர் மருது ஓரிடத்தில் சேர்த்து
வைத்திருந்த சிறு குட்டையில் ஆனந்த குளியலிட்டோம் ,சரியான காலத்தில் சென்றதால் .காட்டின் வழிநெடுக அமைந்து இருந்த நாவல் மரங்களால் கனிகளை ருசித்து உண்டோம் .குளித்து முடித்துவிட்டு விறகுக்கு குச்சிகளை பொருக்கி கொண்டு புறப்பட்டோம் …

அந்தி மாலையில் ஆங்காங்கே குழுவாக உரையாடல்கள் ,சிறிது நேர விளையாட்டு , கணேஷ் தோழரை வைத்து விடாது தோழிகள் செய்த குறும்புகள் , அத்தருணத்தை அழகாக மாற்றியது.

இரவு உணவு உண்டுவிட்டு ,எல்லோரும் தீ மூட்டப்பட்ட இடத்தில் ஒன்றுகூடினோம் …குழு பற்றிய ஒரு அறிமுகம் ,அதனை தொடர்ந்து வேளாண்மை குறித்தும் ,உழவர்கள் குறித்தும் நிகழ்ந்த உரையாடல்கள் ,பாலாற்றில் அணை கட்டப்பட்டது குறித்தும் ,அதன் பின் இருக்கும் மணற்கொள்ளை அரசியல் , தொடர்ந்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டு திட்டமிட்டு வரும் 300 கி.மீ பாலாற்றின் வழிநெடுக செல்ல இருக்கும் நடை பயணம் ,அதற்க்கு நம்முடைய ஆலேசனைகள் ,பங்களிப்புகள் குறித்து தம்பி பரசு குழுவினருடன் பகிர்ந்து கொண்டான் .சற்று நீண்ட விவாதத்தை நிறுத்தி கொண்டு ,சிவா அண்ணண் விவாதத்தின் மைய பொருளை ,ஒவ்வொன்றையும் எப்படி பார்க்க வேண்டும் என சில அனுபவங்களோடு எங்களுடன் பகிர்ந்து கொண்டார் . சிலர் உறங்க செல்ல ,சிலர் வட்டத்தை சுருக்கி கொண்டு ஒவ்வொருவரும் தங்களது பயணத்தை ,நினைவுகளை பகிர்ந்து கொண்டோம் .

மறுநாள் காலை மீண்டும் தோட்ட வேலையில் ஈடுபட்டோம்.காலை உணவிற்கு பிறகு விதைகள் சேகரிப்பதற்காக காட்டிற்குள் சென்றோம்.வழி நெடுக கிடந்த நாவல் விதைகளை சேகரித்தோம் ..அப்படியே ஓடையில் ஒரு ஆனந்த குளியல், வரும் வழியில் சிறுவர்கள் மரத்தின் விழுதுகளில் ஊஞ்சலாட ,நாங்களும் இணைந்து கொண்டோம் .
பாட்டியம்மாவின் பாயச உணவுடன் நாங்கள் விடைபெறுதலுக்கான நேரம் வந்தது.குறிப்பிட்ட நேரத்திற்குள் சென்னை வர வேண்டும் என்பதால் சற்று பதற்றத்துடனே கிளம்பினோம் .சிவராஜ் அண்ணன் புதியதாய் வந்த தோழர்களுக்கு புத்தகத்தோடு ,தன் புன்னகையையும் பரிசளித்து வந்தார்.குக்கூவிற்கு வருபவர்களின் முதல் வரவேற்பும் ,வந்தோரை வழியனுப்புதலும் எல்லாவற்றிற்கும் சாட்சியாக நிற்கும் அந்த அடர்ந்த புளிய மரத்தின் நிழற்கொடையில் குழுவாக அமைந்து புகைப்படம் எடுத்து கொண்டு காத்திருந்த குட்டியானையில் பிரியா விடைபெற்றோம் .
இன்னும் நிறைய உரையாட வேண்டியிருந்தது ..சிவா அண்ணனுடன் ,நேசனுடன் ,ஜான் தோழருடன் ,பாட்டியம்மாவுடன் ,சிறுவர்களுடன் ,ரமேஷுடன் ,தனிமையில் அந்த மூங்கில் காட்டில் …. சரியாக திட்டமிட்டு இன்னும் சற்றுதோட்ட வேலையில் ஈடுபாட்டிருக்கலாம்… மீண்டும் பயணிப்போம் ..

இந்த இருநாள் பயணங்களும் ,புதிய நட்புக்களின் அறிமுகம் ,புலியனூர் கிராமத்து குழந்தைகளுடான துள்ளலான சந்திப்பு ,அமைதியான நிலப்பரப்பில் வழிந்தோடும் ஓட்டையின் நீரோசை ,பறவைகள் எழுப்பிய குயிலோசை ,அலைபேசிகளுக்கு தற்காலிக விடுப்பு ,ஒவ்வொருவரும் சமையல் முதற்கொண்டு ஏதோ ஒரு வேலையில் தன்னை ஆர்வத்துடன் ஈடுபடுத்தி கொண்டது ,கூட்டாஞ்சோறு,என மகிழ்விற்கான ஒரு தளமாக அமைந்தது . வாகன இரைச்சலும் ,அதீத ஒளி விளக்குகளும் ,பரபரப்பான வாழ்க்கை சுமையும் இல்லாது சுதந்திரமாக உலாவினோம்
குக்கூ காட்டு பள்ளி சுற்றுலா செல்வதற்கும் ,கேளிக்கைகளுக்குமான ஒரு நிலம் அல்ல.சக உயிரை நேசிக்க கற்றுக்கொடுக்கும் ,சந்திக்கும் அனைவரையும் தன் உறவுகளாக பாவித்து கொள்ளும் ,எல்லோரையும் ஒரு குழந்தையின் மனதோடு தாலாட்டும் ,காடுகளுக்கும் ,நீரோடைகளுக்கும் ,மண்ணிற்கும்,நமக்குமான தொடர்பை கற்றுக்கொடுப்பதற்கும் ,மரத்திற்கும் நம்முக்குமான உரையாடலை ,பணத்தின் மீது மட்டும் கட்டமைக்கப்பட்ட நுகர்விலிருந்து விடுபடுவதற்கான புரிதலை அளிக்கும் வாழ்தலுக்கான ஒரு நிலம் .

ஆம் குக்கூ நுகர்வின் விடுதலைக்கான ஒரு தளம் …..
ஏராளமான குழந்தைகளின் பெருங்கனவினை சுமந்து செல்லும் வாழ்வியலுக்கான ஒரு கல்வியை,நம்மாழ்வார் அ
ய்யாவின் சுவரில்லா கல்வியை ,சூழலுக்கு இசைவான பொருட்களை கொண்டு எழுப்பப்பட்டு வரும் இந்த காட்டுப்பள்ளியில் உருவாக்கும் முயற்சியில் நம் அனைவரது பங்களிப்பும் ,உழைப்பும்
அவசியமானதாகிறது …
தொடர்ந்து பயணிப்போம்……
தொடர்புக்கு : 9965689020
தன் புகைப்படங்களால் பயணத்தை அழகாக தொகுத்த Balamurali Krishnan அண்ணாவுக்கு நன்றிகள் .
குக்கூ பற்றி மேலும் அறிந்து கொள்ள :
http://cuckoochildren.blogspot.in/…/cuckoo-forest-dear-frie…
https://www.facebook.com/cuckoochildren/?fref=ts

Mesmerising View

13886870_1110535112358481_206544582525439070_n

13872989_943479712429025_6237277018478882178_n

13592619_1174088415976299_4012366248271046671_n

Team effort

13620759_1174088209309653_8467165293142581433_n


13668994_1174088802642927_4421294998282136360_n

Fire Camp

13728902_1174088465976294_2133118861985803948_n 13731661_1174088205976320_7375698106441588824_n 13769380_1174088239309650_7881311301262643416_n

 

Real Happiness 🙂13775777_1174088392642968_3598178337036121789_n

innocent smile

13781807_1174088405976300_1717247717456296215_n

 

bamboo light

13782129_1174088332642974_3509166035499918775_n 13782133_1174088379309636_4103661638226606670_n

 

Thanks to this great team

13626565_1174088445976296_4889662638585751130_n

Advertisements

2 comments on “Volunteering Event at Cuckoo Forest School – July 22nd

 1. மீண்டும் குழந்தையாய்
  எண்ணங்களைக் கொட்டித்தீர்க்கும்
  கலைப்பாத்திரமாய்
  மாறிவிட ஆசைதான்…

  குக்கூ எனும் கால
  எந்திரத்தின் துணையோடு..!

 2. […] to say about her experience at Cuckoo forest school. You can read others experiences at out part 1 […]

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: