4 Comments

புதிய அனுபவம் – அகிலன்

சிறுவயதில் வீட்டு வேலை எல்லாம் நான் செய்ததே இல்லை. எந்நேரமும் விளையாடச் சொன்னால் விளையாடுவேன். அப்படியே வளர்ந்த நான் அண்மை காலமாக உழவின்மீது ஆர்வமுடையவனாய் மாறி வருகிறேன். விவசாயம் பிடிக்கும் ஆனால் தெரியாது. என்ன செய்யலாம் என்று விவசாயத்தில் மிகுந்த ஈடுபாடுடைய நண்பர்களிடம் அவ்வப்போது பேசி தெரிந்துகொள்வது உண்டு. எதையும் தத்துவார்த்தமாக தெரிந்துகொள்வதில் பயனில்லை, செயல்படுத்திப் பார்க்க எண்ணினேன். வீட்டில் இதைப்பற்றி பேசினேன், சிரித்தார்கள். வேறு என்ன செய்வார்கள்? பிறப்பிலிருந்தே நான் சோம்பேறி ஆயிற்றே! வீட்டில் வைத்திருக்கும் செடிகளுக்குக்கூட நான் தண்ணீர் பாய்ச்சியது இல்லை. இப்பொழுது அதை செய்தால் ஏளனம் செய்வார்களோ என்ற ஐயம் இருந்தது. எனவே இவ்வேலைகளை நாம் வீட்டில் துவங்குவதற்கு முன்வெளியே செய்யும் வாய்ப்பு இருக்கிறதா என்று ஆராய்ந்து வந்த நேரத்தில்தான் தி வீக்என்ட் அக்ரிகல்ச்சரிஸ்ட் என்ற அமைப்பின் அறிமுகம் என் தோழியின் வழியாக கிடைத்தது. வார விடுமுறை நாட்களில் ஏதேனும் ஒரு பகுதிக்கு சென்று, அந்த பகுதி விவசாயிகளுக்கு உதவி செய்வதுதான் இவ்வமைப்பின் நோக்கம். அந்த வகையில் இருமுறை திட்டமிட்டு போகமுடியாமல் போனது. அடுத்த முறை எப்படியாவது சென்றாக வேண்டும் என்ற முனைப்புடன் இருந்தேன்.

IMG-20160327-WA0028

26-03-2016 அன்று அதற்கான சூழல் ஏற்பட்டது. திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் அருகே பாக்கம் என்ற கிராமம், அங்கிருந்து ஒன்று முதல் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் ஆலத்தூர் என்ற கிராமம். அந்த கிராமத்தில் தேசம்மா என்பரின் மல்லிகை தோட்டத்தில் அரும்புகள் பறித்தோம். பூக்களைப் பறிக்கவேண்டம் என்றுவிட்டார். இருக்கும் அரும்புகளில் பெரியவை எவை என்று பார்த்து பறித்தோம். இடையிடையே தோழிக்கும் தேசம்மா அவர்களுக்கும் சிறு சிறு உரையாடல்கள் நடந்தன. மொட்டுகள் குறைவாக இருப்பதைப் பற்றி, கருகி இருப்பதைப் பற்றி, நீர்வரத்து பற்றி, அருகில் இருந்த மிளகாய் செடிகளைப் பற்றி, அருகில் இருந்த செங்கற்சூளையைப் பற்றி இன்னும் பல சிறு உரையாடல்கள். அவ்வளவாக அரும்புகள் இல்லை என்பதால் மல்லிகை தோட்டத்தில் இருந்து வெளியேறினோம். அடுத்து ஒரு அரை கிலோமீட்டர் தொலைவில் பச்சைப் பயறு பறிக்கச் சென்றோம்.

IMG-20160327-WA0029

மணி காலை ஒன்பதை நெருங்கியது. எங்களோடு கேரள மாநிலத்தைச் சேர்ந்த சபீர் இருந்தார். அவர் தனது திறன்பேசியில் பாடல்களை ஒலிக்கச்செய்தார். முதல் பாடல் கரகாட்டக்காரன் திரைப்படத்தில் இருந்து மாங்குயிலே பூங்குயிலே. அடுத்தடுத்த பாடல்களும் இசைஞானியின் பாடல்களே. தமிழ் திரைப்படங்களைப் பற்றிய பேச்சு துவங்கியது. தெறி, அஜீத், கமல், தனுஷ் என்று ஒவ்வொருவரும் ஒவ்வொரு செய்தியைப் பற்றி பறித்துக்கொண்டே பேசினார்கள். வெயில் அதிகரித்தது. நிலத்தின் உரிமையாளர் என்று நினைக்கிறேன், கேழ்வரகு கூழ் கொண்டுவந்தார்கள். அவர்களோடு சேர்ந்து பசியும் என்னை அழைத்தது. இரண்டு முறை வாங்கிக் குடித்தேன். குடித்து முடித்த அடுத்த நிமிடமே இட்லி, தோசை மற்றும் சேமியா கிச்சடி வந்திறங்கியது. வயிற்றில் இடமில்லை என்றாலும் அவற்றையும் சாப்பிட்டோம். மீண்டும் பச்சைப் பயறு பறிக்கத் துவங்கினோம். வெயிலின் தாக்கம் அதிகரித்தது. முடியாதவர்களை நிழலில் உட்காரச் சொன்னார்கள், ஆனால் யாரும் அந்த முடிவை எடுக்கவில்லை. அதற்காக வரவில்லையே என்ற எண்ணம்தான். சிறிது நேரத்தில் மோர் கொண்டுவந்தார்கள்.  குடித்தோம்.

IMG-20160327-WA0030

எங்களோடு வந்த ஒரு குழுவினர் அருகாமையில் இருந்த மற்றொரு வயலில் பயறு பறித்துக்கொண்டிருந்தனர். அங்கு சென்றேன். ஏனோ அங்கு வெயிலின் தாக்கம் மேலும் அதிகமாக தெரிந்தது. பறிக்க முடியவில்லை குனியும்பொழுது கால்கள் நடுங்கின. எனது உடல் நிலையை அன்றுதான் உணர்ந்தேன். நல்லா சாப்புடணும் இனிமே! என்று நினைத்துக்கொண்டேன். மதியம் 12.30 மணி அளவில் அனைவருமே சோர்ந்து போனோம். நாக்கு வரண்டது. தண்ணீரைத் தேடி ஓடினோம். நிழலையும்தான். சாலையோர புளியமரம் நிழல் தந்தது. அமர்ந்த அடுத்த நிமிடமே தோழி அழைத்தார். மதிய உணவிற்காக அழைத்தனர்.

IMG-20160327-WA0024

அது ஒரு சுகாதார மையம். அங்குதான் அனைவரும் கூடினோம். அனைவரைப் பற்றியும் அறிந்தோம். அதுவரை அறியாத விடயங்கள் சிலவும் அறிந்தோம். அப்போதுதான் நல்லக்கீரை பற்றி பேசினார் நித்தியானந்த். முற்றிலும் இயற்கை முறையில் பயிரிடப்படும், பாதுகாக்கப்படும் தமிழக பாரம்பரிய கீரைகள் அவை. அவர் சொல்லிக்கொண்டிருக்கும்போதே அங்கு போகவேண்டும் என்ற எண்ணம் அங்கிருந்த பலரிடம் தோன்றியது. சென்றோம். வலைபோன்ற பச்சை நிற துணியாலான கூடாரம். அதனுள்ளே வெவேறு வகையான கீரைகள். வெளியில் அவ்வளவு வெப்பத்தையும் உட்கொண்ட எங்கள் உடல் அக்கூடாரத்தினுள் நுழைந்ததும் சில்லென்றது.  புதினா இலை ஒன்றைப் பரித்துக்கொடுத்தார் நித்தியானந்த், சுவைத்தேன் எவ்வளவு காரம், புத்துணர்ச்சி! வியந்தோம்.

20160326_151816(0).jpg

கீரைத் தோட்டத்தைவிட்டு வெளியே வந்ததும் காய்கறிகள் மற்றும் பாரம்பரிய நெல் பயிரிடப்பட்டுள்ள இடத்திற்குச் சென்றோம்.

IMG_20160326_153703

குள்ளங்கார் நெல்வகை நடப்பட்டிருந்தது. ஒவ்வொரு செடிக்கும் இடையே ஏறக்குறைய ஒரு அடி இடைவெளி. வயலை காயவைத்து நீர் விடுகின்றனர்.  காரணம், நீரைத்தேடி வேர்கள் வளருமாம். வேர் அதிகம் வளர்ந்தால் நல்ல விளைச்சல் இருக்குமாம். இயற்கை முறையில் பயிரிடப்பட்டுள்ள வெண்டை, கத்தரி, தக்காளி போன்றவற்றை பற்றி விளக்கிக்கொண்டே சென்றார் நித்தியானந்த். தோட்டத்தின் கடைசி வரை சென்று பார்த்துவிட்டு திரும்பினோம். வரும்போது நண்பர்கள் கீரை வாங்கினார்கள். முதல்முறை “நல்லக்கீரை” வாங்கினார்கள். திருநின்றவூர் இரயில் நிலையம் வழியாக வீடு திரும்பினோம்.

 

TWA team thanks Mr. Akilan for sharing his experience. This post was originally found at https://akilanpakkam.wordpress.com/

Advertisements

4 comments on “புதிய அனுபவம் – அகிலன்

  1. பகிர்வு மகிழ்ச்சி அளிக்கிறது. நன்றி சதீஷ்.

  2. Unarvoda ezhuthi irukkum vaarthaigalin korvai azhagaai thodutha malligai charam pol ullathu nanbaa….

  3. I’m exactly at the same point in life, as you explained in first para. Never have done physical work since childhood but past 6 months my interest in farming growing exponentially. I’d like to be in touch and can volunteer when you guys go out next. Please keep me informed. Mail: zeru.pianojack@gmail.com

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: