1 Comment

இயற்கை வாழ்வியலை கற்று தந்த ஆசான் – நம்மாழ்வார் :

நம்மாழ்வார் …என் சமகாலத்தில் நான் சந்தித்த பெரும்மனிதர்.எம்மை தொடர்ந்து இயங்க வைக்கும் அந்த கம்பீரமான குரலை முதன்முதலில் தொலைகாட்சிகளில் பார்க்கும் போது யார் இந்த கிழவன் என உற்று நோக்கினேன் .அப்போது அவர் உதிர்த்த ஒவ்வொரு சொற்றொடரும் நாம் வாழ தகுதியற்ற ஒரு நரகத்தில் இருக்கிறோம் எனும் உணர்வை ஏற்படுத்தியது. தொடர்சியாக அவரை பின் தொடர் ஆரம்பித்தேன்.இதோ மூன்று வருடங்கள் கடந்து விட்டது.ஆனால் ஐயா இன்று உடல் அளவில் இல்லை என்றாலும் ,என் போன்ற ஏராளமானவர்களை இயக்க கூடிய ஆற்றலாக பல்வேறு வடிவங்களில் தென்படுகிறார்.இன்று ஓரளவு இந்த நுகர்வு மாயை உருவாக்கி தந்த வாழ்கையில் இருந்து சிறிது சிறிதாக விடுபட்டு தற்சார்பு வாழ்வியலை நோக்கி சென்று கொண்டிருக்கிறேன் .

Nammalvar-Tamil

வேளாண்மையை பற்றிய அரைகுறை புரிதலில் திரிந்த எமக்கு, அதன் உண்மையான புரிதலை எனக்குள் ஏற்படுத்த முயன்றார்.இன்றும் அவரை கற்று கொண்டு இருக்கிறேன் .ஐயா அடிக்கடி கூறுவது போல் இயற்கை வேளாண்மை என்பது ரசாயனத்திற்கு பதிலாக ,எருவை போடுவது அல்ல ! அது ஒரு வாழ்வியல் முறை .நம் உணவு சங்கலியை சரியாக புரிந்து கொள்வதன் மூலமே அதனை முழுமையாக உணர இயலும் என்பார் .அவரின் சிறப்பே எல்லோரிடத்திலும் புரியும்படியான எளிய மொழியை கையாள்வது தான் .இன்று நாம் நிறைய அறிந்து வைத்து இருக்கிறோம் .ஆனால் மற்றவர்களிடம் கொண்டு செல்லும் போது மிக பெரிய இடைவெளி இருப்பதை உணர முடிகிறது

பசுமை புரட்சியால் சிக்கி சிதறுண்ட உழவர்களின் அவலங்களை ,கண்ணீரை எடுத்துரைக்கும் போர்க்குரலாக அவர் திகழ்ந்தார்.நான் பார்த்தவரை செல்லும் பெரும்பாலான இடங்களில் இயற்கை வேளாண்மையை பற்றி பேசுவதை விட, ரசாயன வேளாண்மையில் உள்ள பாதிப்புகளையும் , பன்னாட்டு நிறுவனங்களின் சூழ்ச்சிகளையுமே அதிகம் சாடியுள்ளார் .ஒரு பாமர உழவனின் அவலகுரலை அரசாங்கத்தின் காதுகளுக்கு எடுத்து சென்றதோடு அல்லது ,அவற்றை மாற்றுவதற்கான தீர்வுகளையும் முன் வைத்தார்.

தமிழகம் முழுவதும் பல இடங்களுக்கு பயணம் செய்து ,உழவர்களை சந்தித்தார். அவர்களை இயற்கை வேளாண்மை நோக்கி திரும்புவதற்கான பாதைகளை உருவாக்கி தந்தார் .நான் கூறும் பெரும்பாலான கருத்துக்கள் ,சந்திக்கும் எளிய மனிதர்களிடம் இருந்தும் ,கடும் வெயிலில் ,வயக்காட்டில் கோமணத்துடன் தன்னை வருத்தி கொண்டு எல்லோருக்கும் உணவினை உற்பத்தி செய்யும் எளிய உழவனிடம் இருந்து கற்றவைகளே என அடக்கத்துடன் கூறும் அவரின் அந்த பேச்சுதான் என்னை பெரும்பாலான கிராமங்களை ,எளிய மாந்தர்களை. உழவர்களை நோக்கி பயணபடுவதர்க்கு உந்துதலாக அமைந்தது.

Nammalvar

மீத்தேன் திட்ட எதிர்ப்பின் ஆரம்ப நிலையில் அவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.தமிழகத்தில் தொடர்ச்சியாக ஒவ்வொரு பகுதிகளிலும் நடைபெறும் சூழலியல் படுகொலைகளை பட்டியலிட்டார் .இவை ஒவ்வொன்றிற்கும் உள்ள தொடர்பினை அவருக்கே உரித்தான நகைச்சுவையோடு எடுத்துரைத்தார். எல்லா இடங்களிலும் சிறு சிறு குழுக்களை உருவாக்கி ,இவற்றிற்கு எதிராக ஒரு பேரியக்கத்தை கட்டி எழுப்ப வேண்டிய கடமை நம்முன் உள்ளது என கூறினார்.

அவருக்கு பிறகு அதற்கான செயல்பாடுகளை நம் பெரிதும் முன்னெடுக்க வில்லை என்பதே எதார்த்தம்.

அதே வேளையில் அவருக்கு பிறகான இந்த காலங்களில் ஆயிரகணக்கான இளையோர்கள் ,இயற்கை வேளாண்மை நோக்கியும் ,தற்சார்பு வாழ்வியல் முறையை நோக்கியும் வந்து கொண்டு இருகின்றனர் .ஆனால் அவரை உள்வாங்கிய அளவிற்கு ,அவரின் கொள்கைகளை நாம் சரியாக உள்வாங்க வில்லை.ஒரு மரக்கன்று நடுவதும் ,நகரத்தின் வீதிகளில் ஒரு இயற்கை வேளாண் அங்காடியை அமைப்பதுமே நம்மில் பல பேருக்கு அதிகபட்ச செயல்திட்டமாக உள்ளது .ஐயா இதனை ஒரு போதும் விரும்ப மாட்டார். மலடாக்கப்பட்ட நமது நிலத்தையும் ,நஞ்சாக்கபட்ட நமது உணவையும், மாசடைந்த நீரையும் நாம் மீட்டெடுக்க ஓன்று திரள வேண்டும்.அவை மக்களோடு இணைந்த போராட்ட வடிவமாகவும் இருக்கலாம். இடம் ,காலம் அறிந்து வெல்வேறு வடிவங்களில் நாம் செயல்பட வேண்டும்.

அவர் விரும்பியதெல்லாம் தற்சார்பியளுடன் கூடிய சாதி ,வர்க்க வேறுபாடுகள் அற்ற, வாழும் கிராமங்களை எல்லா இடங்களிலும் உருவாக்குவதுதான்.தமிழகம் முழுவதும் இயற்கை வேளாண் மாதிரி பண்ணைகளை உருவாக்க வேண்டும் என அடிக்கடி கூறுவார்.அதனை நோக்கியே நமது செயல்பாடுகளை முன்வைப்போம்

…..

– – தமிழ்ச்செல்வன்

Advertisements

One comment on “இயற்கை வாழ்வியலை கற்று தந்த ஆசான் – நம்மாழ்வார் :

  1. Nanbaa…muthalil ennai manniyungul…..en kaipesiyil thamizh vazhi seithi anuppum vinnappam illai….aathalal aangila ezhuthukalaal thamizhai alangarikka muyirchitthaen…thavaru aethum irunthaal thiruthi kolgiraen….nammudaya vishayathirkku varuvome….ungalin enna ottangal thaan aerakuraya sarasariyaana paditha ilainjar nenjil avvapothu thulirvidum aanal thulir vitta adutha nodiye palaridam madinthu viduginrathu….enakkum immaathiriyaana iyarkai vivasaayathil ippothaikku aasaigalaaga irukkirathu athai aarvamaakka ungalin uthavi thevai… ungal alai pesi ennai pagirnthaal uruthunayaaga irukkum….

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: