Leave a comment

அடி காட்டுக்கு, நடு மாட்டிற்கு, நுனி வீட்டிற்கு

கடந்த வாரம் நமது குழுவில் இருந்து தாம்பரம் அருகே உள்ள இயற்கை வேளாண் பண்ணைக்கு நெல் அறுவடைக்கு சென்று இருந்தோம் .நமது பாரம்பரிய நெல்லான இலுப்பை பூ சம்பா நெற்பயிர் விளைவிக்கப்பட்டு இருந்தது .எங்கள் குழுவின் பெரும்பாலானோருக்கு நெல் அறுவடை அப்போதுதான் முதல் முறை .இடைவெளி விட்டு நட்டு இருந்ததால் எளிதாக அறுவடை செய்ய முடிந்தது .இரண்டு நாட்களும் மிக அருமையான அனுபவத்தை கொடுத்த பயணமாக அமைந்தது .

Paddy harvest 2

நம்மாழ்வாரின் அடிக்கடி கூறும் பழமொழியான “அடி காட்டுக்கு ,நடு மாட்டிற்கு ,நுனி வீட்டிற்கு ” பொருளை அறுவடையின் போது முழுமையாக உணர்தோம் .
நெல் நாற்று நடுவதில் இருந்து ,அறுவடை வரை இன்று முழுவதும் இயந்திரமாகிவிட்ட நிலையில் கை அறுவடை என்பது ஏறக்குறைய இல்லாமல் போய்விட்டது .ஆட்கள் பற்றாக்குறையும் ,போதிய அனுபவம் உள்ள ஆட்கள் கிடைக்காததும் காரணங்களாக தென்படுகின்றது .குறைந்த பட்சம் விதை நெல்லுகாகவது கையில் அறுவடை செய்து ,களத்து மேட்டில் அடித்து ,முறத்தில் புடைத்து மூட்டை கட்டும் வேலை தெரிந்து வைத்திருக்க வேண்டும் .அதனை கற்கவே சென்றோம் . மேலும் கை அறுவடை மூலமே மாட்டிற்கு தேவையான முழுமையான வைக்கோலை பெற முடியும் .நெல் அறுவடை தொடங்கி ,அறுவடை செய்த நெற்கதிரை களத்து மேட்டில் அடிப்பதற்கு லாவகமாக கட்டுதல் ,களத்து மேட்டை தயார் செய்தல் ,நெல்மணிகளை சிந்தாதவாறு கவனமாக அடித்தல் ,அடித்த நெற்கதிரை வைக்கோல் தூசி ,கருக்கா இல்லாது தூற்றி பிரித்தெடுத்தல் ,பின்னர் மூட்டை கட்டுதல் என ஒவ்வொரு படி நிலையையும் கவனமாக கற்று கொண்டோம் .

Paddy harvest 1

“நெல் ” என்ற சொல்லுக்கு பின்னர் ஒரு சமூகத்தின் பண்பாட்டு வேர் அறுக்கப்பட்டு அடிமை சமூகமாக மாற்றப்பட்ட ஒரு நீண்ட நெடிய வரலாறு உள்ளது .ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல்வகைகள் தமிழகத்தில் இருந்துள்ளது .ஒவ்வொரு பகுதிக்கு சூழல் ,காலநிலை மாறுபாடுகளை பகுத்தறிந்து நமது முன்னோர்கள் நெற்பயிராய் பயிரிட்டுள்ளனர் .வறட்சியை தாங்கி வளரும் வாடன் சம்பா ,உவர்நிலத்தில் வளரும் உவர்முண்டான் ,வெள்ளத்தை தாங்கி நிற்கும் மடுமுலுங்கி ,என ஒவ்வொரு நெற்கதிரின் பெயருக்கும் பின்னால் வலுவான பொருள் உள்ளது .இயற்கை சீற்றங்களையும் ,பூச்சிகளையும் தாங்கி வளரும் ஏராளமான பயிர்கள் நம் மண்ணில் விளைவிக்கப்பட்டு வந்தன . ஆனால் பசுமை புரட்சியில் அவையெல்லாம் அழிக்கப்பட்டு ADT 38, IR 20 என எண்களால் பெயரிடப்பட்டு நீண்ட நெடிய பாரம்பரிய அறிவு சிதைக்கப்பட்டு விட்டது .நெல்லையே பார்த்திராத நாட்டினர் இன்று நமது பாரம்பரிய நெல் ரகத்திற்கு உரிமை கொண்டாடி வருகின்றனர் .

Paddy harvest 4

நீண்டு வளரும் நமது நெற்பயிரானது உணவு சங்கிலியை ஈடுகட்டும் ஒரு பயிராகவே பார்க்கப்பட்டு வந்தது .மண்ணில் வாழும் அனைத்து வகையான உயிர்களுக்கும் உணவளிக்க கூடிய நமது பாரம்பரிய பயிரை ,குட்டை ரகமாக சுருக்கப்பட்டு அவற்றை வெறும் உற்பத்தி பண்டமாக மட்டுமே பார்க்கும் மனநிலையை நமது விவசாயிகளிடம் உருவாக்கியதே பசுமை புரட்சியின் சாதனையாக பார்க்க முடிகிறது .அதனால் தான் விதைகளோடு சேர்ந்து ,நமது வேளாண் முறைகளையும் மாற்றி வருகின்றனர் .

Paddy harvest 3

இன்றைக்கு பெரு நிறுவனங்களின் பார்வை ,இந்தியாவில் உள்ள விதைகளை கட்டுபடுத்தி வேளாண்மையை தமது கட்டுப்பாட்டிற்குள் வைப்பதே அவர்களின் பெரும் நோக்கமாக கொண்டு செயல்பட்டு வருகின்றனர் .

Paddy harvest 5

நம்மாழ்வார் அய்யா ,நெல் ஜெயராமன் போன்றோர் நாம் இழந்த நூற்றிற்கும் மேற்பட்ட நெல் வகைகளை மீட்டெடுத்து ,மக்களிடம் மீண்டும் பரவலாக கொண்டு சென்றனர் .நாமும் அவர்களுடன் இணைந்து நெல் ரகங்களை மீட்டேடுப்பதுடன் ,மறைந்து வரும் நமது வேளாண் முறைகளையும் ,விடுபட்ட முந்தைய தலைமுறையினரிடம் இருந்து கற்றறிவோம் .

Paddy harvest 6

இலுப்பை பூ சம்பா பெயர் காரணம் :

நெல் ரகம் கருஞ்சிவப்பு நிறத்திலும் ,அரிசி வெள்ளை பழுப்பு நிறத்திலும் காணப்படும் .பயிர் காலங்களில் பயிர் பூக்கும் போதும் ,கதிர் வெளியில் வரும் போதும் இலுப்பை பூ போன்று நறுமணம் வயல் வெளி எங்கும் அடிக்கும் .அதனால் இதற்க்கு இலுப்பை பூ சம்பா என பெயர் வந்தது .

Paddy harvest 7
உணவிற்கு சுவை மிகுந்த சன்ன ரக பயிராகும் .மிகுந்த மருத்துவ குணமும் கொண்டது .

பயிர் நாள் – 140 நாட்கள் .

நிகழ்விற்கு உறுதுணையாக இருந்த ஜனகன் மற்றும் நித்தியானந் தோழர்களுக்கு நிறைந்த நன்றிகள்

Paddy harvest 8

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: