2 Comments

தற்சார்பு வேளாண்மையை நோக்கிய பயணம்

TWA குழுவில் இருந்து தொடர்ச்சியாக ஆலத்தூர் கிராமத்தில் உள்ள வேளாண் மக்களுடன் இணைத்து வேளாண் வேலைகளை செய்து வருகிறோம்.பெரும்பாலும் மல்லிகை பயிர்களும் ,நெற்பயிர்களும் ,காய்கறி பயிர்களுமே பிரதான பயிராக விளைவித்து வருகின்றனர் வார இறுதியில் குழுவில் இருந்து நபர்கள் சென்று அவர்களுக்கு தேவையான வேலைகளை செய்து வருவதுடன் ,இயற்கை வேளாண்மை சார்ந்த விடயங்களை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து கூறி வருகின்றோம் . அங்குள்ள உழவர்கள் ரசாயன முறையிலேயே வேளாண்மை செய்து வருகின்றனர்.பெரும்பாலான செலவுகள் ரசாயன உரத்திற்கும் ,உயிர்கொல்லி மருந்திர்க்குமே செலவளிக்கின்றனர்.

1929949_965535076858486_694969833175740677_n

நஞ்சில்லா,செலவில்லா,தற்சார்பு வேளாண்மையை எடுத்து செல்லும் எங்களது முயற்சியில் அவ்வபோது சிறு இடர்பாடுகள் இருந்தாலும் ,தொடர்ச்சியான முயற்சியை எங்களது உழைப்பின் மூலம் அளிக்க உறுதி பூண்டுள்ளோம் . தற்போதைய மழை வெள்ளத்தால் பெரும்பாலான விளை நிலங்கள் முழுவதுமாக பாதிக்கப்பட்டு உள்ளன.ஏற்கனவே உழவர்களை சந்தித்து அவர்கள் பிரச்சனைகளை கேட்டறிந்து ,நமது உணவு முழுவதுமாக நஞ்சாக்க பட்டுள்ளதை பற்றியும் ,நமது விதைகள் முழுவதுமாக களவு போனதை பற்றியும் ,செலவில்லா இயற்கை வேளாண்மைக்கு கொஞ்சம் கொஞ்சமாக மாறுவதற்கு முற்படுங்கள் எனவும் கூறி இருந்தோம் .அதற்காக முழு ஒத்துழைப்பையும் அளிப்பதாக கூறினோம் .அவர்கள் தயக்கத்துடன் கேட்டறிந்தனர்.

12417831_965534860191841_1569138690323080222_n

இந்த முறையும் சில உழவர்களை சந்தித்து ,பாதிக்கப்பட்ட வேளாண் பகுதிகளை பார்வையிட்டோம் .தற்போது சில உழவர்கள் எங்களின் ஆலோசனைகளை கேட்டறிந்ததுடன் தங்கள் நிலத்தில் உடனடியாக சிறு இடத்தில் செய்து பார்க்கிறோம் என்ற உறுதியையும் அளித்தது மிகுந்த நம்பிக்கையை தந்தது .அவர்களுக்கு விதை நெல் வாங்குவதற்கும் ,மல்லி நாற்று வாங்குவதற்கும் உதவ கேட்டனர் .சாரதி அய்யாவின் ஆலோசனையின் பேரில் சில உழவர்களை தேர்ந்தெடுத்து அவர்களின் விதிகளுக்கு தேவையான நிதி உதவியை குழுவில் உள்ள சில நண்பர்களின் உதவியால் அளித்துள்ளோம் .மேலும் பாரம்பரிய நெல் ரகமான பூங்கார் விதையை இரு உழவர்களுக்கு அளித்து .சிறு நிலத்தில் போடுமாறு அறிவுறுத்தி உள்ளோம்.அவர்கள் தற்போது 1010 என்ற நெல் ரகத்தை பயிர் செய்து வருகின்றனர். மேலும் பார்த்தசாரதி என்ற உழவரின் நிலத்தில் மிளகாய் நாற்று நடும் பணி இருந்தது .இந்த தடவை இரண்டு மேட்டு பாத்திகளை அமைத்து அவற்றில் தொழு உரம் இட்டு மேற்பகுதியை மூடாக்கு செய்து அதில் நாற்றை வைத்து உள்ளோம் .அவர்கள் சாதரணமாக பயிடுவதர்க்கும் ,இதற்கும் உள்ள உள்ள வேறுபாட்டினை காண இயலும் என கூறி வந்தோம்.

12540586_965534830191844_452038082181187218_n

.ஒரே வழியாக இயற்கை வேளாண்மைக்கு மாற்றுவது கடினம் .அவர்களின் வாழ்வாதத்திற்கு பெரும் பிரச்சனையாக அமைய வாய்புண்டு.மேலும் அவர்களுக்கு நம்பிக்கையின்மையையும் அவை அளிக்க கூடும் .ஆதலால் சிறிது சிறிதாக அவர்களிடம் ,அவர்களின் வழியிலேயே எடுத்து செல்ல முயற்சித்து வருகிறோம் .இந்த தடவை தோழர்கள் ஜனகன் மற்றும் பிரபுவின் அனுபவம் சார்ந்த பங்களிப்பு பிரச்சனைகளையும் ,அதற்கான உடனடி தீர்வையும் உழவர்களிடம் எடுத்து செல்வதற்கு முக்கிய பங்கு வகித்தனர்.மேலும் இந்த தடவை Orchid நிறுவனத்தை சார்ந்து நபர்களும் எங்களுடன் இணைந்து கொண்டதுடன் ,அவர்களுடான இருநாள் பயணம் நல்லதொரு அனுபவத்தை பெற்று தந்தது.

12524097_965534876858506_4317660187378100376_n

மேலும் அடுத்த வாரம் சில இடத்தில் மேட்டு பாத்தி அமைத்து கொடுத்தல்,பூங்கார் ஒற்றை நாற்று நடும் பணி ,மல்லிகை தோட்டத்திற்கு நாற்று நடுதல் மற்றும் மூடாக்கு இடும் பணி உள்ளது இயற்கை வேளாண்மையில் அனுபவமுள்ள தன்னர்வாளர்கள் மற்றும் ஆர்வமுள்ள தன்னர்வாளர்கள் வரும் நாட்களில் இணைந்து கொண்டால்,மிக்க பயனுள்ளதாக இருக்கும் .

12400967_965540256857968_6857437962987778280_n

2 comments on “தற்சார்பு வேளாண்மையை நோக்கிய பயணம்

  1. I need your contact address or phone for தற்சார்பு வேளாண்மையை நோக்கிய பயணம்

Leave a comment