1 Comment

Namman (Kodaikanal) Farm Visit Experience

நம்மண் பண்ணையின் பயண அனுபவங்கள் :

கொடைக்கானல் செல்லும் வழியில் பெருமாள் மலை – பழனி பாதையில் அஞ்சி வீடு அருகே அமைந்துள்ளது நம்மண் எனும் இயற்கை வேளாண் பண்ணை.TWA (The Weekend Agriculturist) குழுவில் இருந்து தோழர்களோடு இரண்டு நாட்கள் சென்று இருந்தோம் .ஏற்கனவே கடந்த ஆண்டு சென்று இருந்தாலும் ,சிறுநேர பயணமாகவே அது அமைந்தது.முதல் நாள் வெள்ளி மாலை வேளையில் சென்னையில் இருந்து எங்களது பயணத்தை தொடர்ந்தோம்.பெரும்பாலான TWA பயணம் ஆனது புதிய நண்பர்களின் வருகையே அதிகம் நிறைந்ததாக இருக்கும் .இந்த முறை தெரிந்த தோழர்கள் பலர் இணைந்து கொண்டதால் ,ஆரம்பத்தில் இருந்தே பயணம் சிறப்பான அனுபவத்தை கொடுத்தது.

Namman (Kodaikanal) Farm Visit Experience 3

பேருந்தில் நடந்த விவாதத்துடன் கூடிய அனுபவ பகிர்வுகள் ,நல்லதோர் கற்றல் அனுபவத்தை கொடுத்தது .ஓட்டுனரின் துடிப்பான வேகத்தில் நிர்மாணித்த நேரத்திற்கு முன்னரே பெருமாள் மலையை அடைந்தோம் .நடுக்கத்துடன் கூடிய அதிகாலை பொழுது அருகில் உள்ள தேநீர் கடையில் சிறு நேரம் கழிக்க நேர்ந்தது.பின்னர் கருப்பசாமி தோழரின் உதவியோடு பண்ணையை அடைந்தோம் .

Namman (Kodaikanal) Farm Visit Experience 1
இயற்கையான சூழலுடன் கூடிய பறவைகளின் ரீங்காரமும் ,ஓடையின் சல சல சத்தமும் ,இன்றைக்கு நல்ல விருந்து என்பதுபோல் அட்டைகளும் எங்களை அன்போடு வரவேற்றன .

Namman (Kodaikanal) Farm Visit Experience 2

செல்லும் சூழல் மழைகாலத்தின் ஆரம்பம் என்றும் அறிந்தும் ,அந்த சூழலை முன்னரே உள்வாங்கி கொண்டமையால் அவ்வபோது தொடர்ந்து பெய்த சாரல் மலையை வருடி கொள்ள முடிந்தது.அதற்கு இசைவு கொடுப்பது போல் இருந்தது அருகில் உள்ள ஓடையின் நீர்வரத்து .நடுக்கத்துடன் கூடிய தோழர்களுடான ஓடை குளியல் பரவசமான அனுபவத்தை தந்தது.

Namman (Kodaikanal) Farm Visit Experience 7

நம்மண் பண்ணை ஆனந்தராஜ் மற்றும் அவருடைய தோழர்களால் அய்யா நம்மாழ்வாரின் முன்னிலையில் சில ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கப்பட்டது .ஆர்வத்துடன் கூடிய நிறைய இளைஞர்களுக்கு இயற்கை வேளாண்மை மூலம் வேலைவாய்ப்பினை உறுதி செய்வது இவர்களின் பிரதான நோக்கமாகும் .தோட்டா பயிர்களே பிரதான உற்பத்தியாக உள்ளது .திருநெல்வேலி ,கொடைக்கானல் உள்ளிட்ட சில இடங்களில் இவர்கள் வடிவமைத்த பண்ணைகள் உள்ளன .இவர்களை பற்றி மேலும் அறிந்து கொள்ள :
நம்மண் : https://web.facebook.com/%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%A…/…
வலைத்தளம் : http://nammann.com/about-us/
நம்மண் தொடர்புக்கு – ஆனந்தராஜ் : 9787305169

மலைபகுதி என்பதால் பெரும்பாலும் மலைசார்ந்த பயிர்களே இங்கு விளைவிக்கபடுகிறது. செள செள,பட்டர் பீன்ஸ் ,பீட் ரூட் ,கேரட் ,முட்டைகோஸ்,காலிபிளவர் ………போன்றவைகள் மேட்டு பாத்தி முறையில் பயிரிடப்பட்டு வருகின்றன .இங்கு உற்பத்தி செய்யப்படும் காய்கறிகள் சென்னைக்கே விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன .எங்களில் பெரும்பாலானோர் சமவெளி காய்கறி பயிரிடுதலை பற்றி அறிந்து இருந்தாலும் ,மலைபயிர்கள் பயிரிடுதல் பற்றி அறிந்து கொள்வதற்கு நல்லதொரு வாய்ப்பினை பயணம் உருவாக்கி தந்தது.
ஆரம்பமே அட்டை பூச்சிகள் எங்களை பதம் பார்க்க தொடங்கி விட்டன .புது இரத்தம் அவர்களுக்கு அறுசுவை ஊட்டியது போல் இருந்து போலும் !

Namman (Kodaikanal) Farm Visit Experience 5

தேயிலை தோட்டங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மழைகாலங்களில் அட்டைகளினால் வேலைகளின் போது படும் துன்பங்களை புத்தகங்களிலும் ,அவர்களை நேரில் சந்தித்த போதும் முன்பே அறிந்து இருந்தாலும் .அந்த வார்த்தைகளின் உணர்வை தற்போது உணர நேர்ந்தது.எந்த உணர்வையும் தராது நம்மிடையே ஒட்டிக்கொண்டு இரத்தத்தை உறிஞ்சி எடுத்து கொள்கிறது ,பெரிதாக வலி உணர்வை எதுவும் தராது எனினும் ஒரு பயம் கலந்த உணர்வை இறுதி வரை உருவாக்கியது .

Namman (Kodaikanal) Farm Visit Experience 6

ஓடை குளியல் முடிந்தவுடன் ,காலை உணவை உண்டுவிட்டு பண்ணையில் வேலைகளை தொடங்கினோம் .காய்கறிகளுக்கு பாத்திகளை அமைப்பது மற்றும் காய்கறி விதைப்பு எங்களது வேலையாக இருந்தது .பின்னர் எங்களை அறிமுகம் செய்து கொண்டு ஆனந்தராஜ் தோழர் பண்ணையை பற்றி அனுபவங்களை எங்களுடன் பகிர்ந்து கொண்டார் .உண்ட மயக்கத்தில் சிலர் துயில் கொள்ள ,சிலர் அருகில் உள்ள கிராமத்திற்கு பயணம் செய்தனர் .விட்டு விட்டு பெய்த சாரல் மழை ,நீண்ட நேரம் நடந்த பல்வேறு கருத்துகளை உள்ளடக்கிய விவாதங்கள் ,மாடி தோட்ட பயிர்களை பற்றிய கலந்துரையாடல் ,நெருக்கத்துடன் கூடிய உறக்கம் என அன்றைய பொழுது பலவித அனுபவத்தை தந்தது.

Namman (Kodaikanal) Farm Visit Experience

விடிய விடிய பெய்த மழை மறுநாளில் ஓடையின் வேகத்தை கூட்டி இருந்தன .அதில் ஆனந்த குளியல் இட்டுவிட்டு ,பண்ணையை நோக்கி புறப்பட்டோம் …. மறுநாளில் சிலர் பண்ணை வேளைகளில் ஈடுபட சிலர் நாட்டு கோழியின் சுவையை உணர்ந்திட சமையலறையிலும் ,சிலர் விதைகள் சேகரிப்பிலும் எங்களை ஈடுபடுத்தி கொண்டோம் .மறுநாள் வேறொரு பயணம் திட்டமிட்டு இருந்தாலும் தொடர்ச்சியான மழை ,நாட்டுகோழியின் சுவைக்கு ஆட்பட்டு எடுத்துக்கொண்ட அதீத நேரம் என திட்டமிட்ட படி செல்ல முடியவில்லை .
ராஜேஷ் அண்ணனின் குறும்பான பேச்சு ,பெருமாள் மற்றும் மணி அண்ணன்களின் செறிவு மிகுந்த கருத்துகள் ,குழந்தை ஓவியாவின் துள்ளலான பேச்சு ,என பல்வேறு தோழர்களின் பங்களிப்போடு அந்த சிறிய மண்குடிலில் தங்கிய அனுபவம் நல்லதொரு புரிதலுக்கு இட்டுசென்றது…….

மீண்டும் பண்ணைக்கு வருவோம் என்ற சொல்லாடல்களை ஆனந்தராஜ் தோழரிடம் கூறிவிட்டு ,பயணத்திற்கு மிக்க உதவியாக இருந்த ஆனந்தராஜ் ,கருப்பசாமி தோழர்களுக்கும் ,இரண்டு நாளும் சுவையான உணவினை அளித்த கார்த்திக் போன்றவர்களுக்கு நன்றி கலந்த வணக்கத்தோடுவிடைபெற்றோம் .

இறுதியாக இயற்கையின் சூழலை அழித்து நவீன வாசிகளால் கட்டிடங்கள் மிகுந்த செயற்கை சுற்றுலாத்தலமாக மாற்றப்பட்ட கொடைக்கானல் முக்கிய பகுதிக்கு செல்ல நேர்ந்தது .ஒரு பக்கம் மழைத்துளிகளும்,மற்றொருபக்கம் மேகம் சூழ்ந்த பனி படலங்களும் ,நடுக்கத்துடன் கூடிய குளிர்காற்றும் சூழப்பட்டு இருந்ததால் எங்கும் செல்ல முடியவில்லை .இறுதியாக கடைத்தெருக்களில் சுற்றிவிட்டு பேருந்துகளை நோக்கி பயணத்தை நிறைவு செய்தோம்.

Namman (Kodaikanal) Farm Visit Experience 4

 

Author:

தமிழ்ச் செல்வன்

Advertisements

One comment on “Namman (Kodaikanal) Farm Visit Experience

  1. hello  anything being organized this saturday  sriram

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: