Leave a comment

TWA Team Helping Students in Anna University

சென்னை அண்ணா பல்கலைகழகத்தில் மாணவர்கள் இணைந்து 1 ஏக்கர் நிலத்தில் இயற்கை வேளாண்மை செய்து வருகின்றனர் .TWA குழுவில் இருந்து இரண்டு நாட்கள் அவர்களுடன் இணைந்து பணியாற்ற சென்று இருந்தோம் .காணி நிலத்தில் ஒருங்கிணைந்த பண்ணையை திட்டமிடுதலும் ,அதற்கான பணியினை முன்னெடுத்தாலும் எங்களது பணியாக இருந்தது.

மூர்த்தி என்ற மாணவரின் உந்துதலும் ,அதற்க்கு செயல் வடிவம் கொடுக்க முயன்ற ஆசிரியரின் கடும் முயற்சியினாலும் இன்று அங்கு இயற்கை வேளாண்மை சாத்தியப்பட்டு இருக்கிறது .மொத்தம் உள்ள ஒரு ஏக்கரில் காணி நிலம் பிரிக்கப்பட்டு ஒருங்கிணைந்த பண்ணையம் அமைக்கவும் ,மீதி உள்ள நிலங்களில் காய்கறி தோட்டங்கள் ,கீரைகள் மேலும் ஒரு 20 செண்ட்ல் அழிவின் நிலையில் உள்ள .நாம் இழந்து விட்ட மரச்செடிகளை மீண்டும் கொண்டு வந்து சிறிய காட்டினை உருவாக்குவதே அவர்களின் திட்டமாகும் .நெறைய மாணவர்களுக்கு ஆர்வம் இருந்தாலும் அதனை செயல்படுவதில் உள்ள உறுதித்தன்மையை கல்லூரியில் உற்பத்தி துறையில் நான்காம் ஆண்டு படித்து வரும் மூர்த்தி தான் முன்னெடுத்து செல்கிறார் .அதற்காக கடந்த இரண்டு வருடங்களாக தமிழகம் முழுவதும் நிறைய பயணம் செய்து ,இயற்கை வேளாண் பண்ணைகளை பார்வையியிட்டதுடன் ,அனுபவம் மிக்கவர்களை அழைத்து வந்து மாணவர்களுக்கும் பயிற்சிகளை ஏற்பாடு செய்து உள்ளனர் .ரவிக்குமார் என்ற ஆசிரியரிடம் பேசிய போது சிறந்த தொழில்முனைவோர்களை உருவாக்குவதற்கான நல்லொதொரு முயற்சியை கல்லூரியில் ஏற்படுத்தி வருவதை பற்றி எங்களுடன் பகிர்ந்து கொண்டார் .

வேளாண் துறை மாணவர்களை இதில் ஈடுபடுத்துவதுடன், அனைத்து துறை மாணவர்களையும் இதில் ஈடுபடுத்தி அவர்களின் பங்களிப்போடு நல்லதொரு மாதிரி பண்ணையை உருவாக்க ஒருங்கிணைந்து செயல்படுத்த உள்ளதாக நம்பிக்கையுடன் கூறினார் .அவரின் அதீத பங்களிப்பினால் தான் மாணவர்கள் நம்பிக்கையுடன் செயல் படுகின்றனர் .கல்லூரி விடுதியில் தங்கி பயிலும் சுமார் 5000 மாணவர்களுக்கும் தற்போது உண்ணும் நஞ்சு கலந்த உணவை தவித்து ,அங்கு விளைவிக்கப்படும் இயற்கை வழியில் விளைந்த உணவை வழங்க வேண்டும் என்பது அவர்களின் நல்லதொரு திட்டமாக உள்ளது .சில மாணவர்களிடம் பேசிய போது ,ரசாயனம் கலந்து நசுண்ட உணவை பற்றிய புரிதலும் ,இயற்கையின் மீது கொண்ட அன்பினாலும் ,நம்மாழ்வார் அய்யாவின் உந்துதலும் தங்களை இவர்களுடன் இணைந்து செயல்பட உதவியது என கூறினார் .அவர்களுக்கு வாழ்த்துகளை கூறி கொண்டதோடு ,தொடர்ச்சியாக அவர்களுடன் இணைந்து செயல்படுகிறோம் என உறுதியை அளித்து அங்கிருந்து விடைபெற்றோம் .மேலும் தமிழகம் முழுவதும் உள்ள கல்லூரிகளில் இதனை தொடங்க வேண்டும் என்றும் ,அதற்கான முன்முயற்சியாக இங்கே ஒரு மாதிரியை உருவாக்க உள்ளோம் என நம்பிக்கையுடன் கூறினார்கள்

TWA1

TWA2

TWA3

TWA4

Author:
தமிழ்ச் செல்வன்‎

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: