4 Comments

TWA – Alathoor Volunteering Event – 16th & 17th of May 2015

TWA குழுவினர் இரண்டுநாள் பயணமாக ஆலத்தூர் கிராமத்திற்கு உழவர்களுடன் இணைந்து பணிபுரிய சென்று இருந்தோம்.கோடை மழையும் ,கத்தரி வெயிலும் இணைந்தே எங்களை வரவேற்றன.இரண்டு நாட்களும் சேகர் என்ற உழவரின் கத்தரிக்காய் தோட்டத்தில்தான் பணிபுரிய நேர்ந்தது.ஏற்கனேவே இதே பண்ணையில் தான் கத்தரிக்காய் விதைப்பின் ஆரம்பத்தில் பணிபுரிந்தோம்! கத்தரிக்காய் செடியில் களை எடுத்தல் ,அறுவடை செய்தல் ,அறுவடை செய்த கத்திரிக்காயை தரம் பிரித்தல் இவையே எங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியாக இருந்தது.இந்த இரண்டு நாட்களும் விவசாயிகளின் நேரடி அனுபவங்கள்,கிராமத்து சூழலுடன் கூடிய மக்கள் என பயனுள்ள நல்ல அனுபவங்களை பெற்று தந்தது.முதல் நாள் அறுவடையின் போது 150 கிலோ கத்தரிக்காய் அறுவடை செய்தோம் .அவற்றில் ஏறக்குறைய 30 கிலோ பூச்சிகளின் தாக்குதல்,முற்றிவிட்டது என கூறி ஒதுக்கி விட்டனர் . மீதமுள்ளவற்றை விற்பனைக்கு எடுத்து சென்றனர்,ஆனால் வெறும் கிலோ 8 ரூபாய்க்கு தான் சென்றது.மறுநாள் அதே கத்தரிக்காய் கிலோ 14 ரூபாய்க்கு சென்றது.250 கிலோ எடுத்து சென்றதில் வாகன செலவு ,அறுவடை கூலி ,மருந்து தெளித்தல்,களை எடுத்தல் போன்ற செலவுகள் போக விவசாயிக்கு மிஞ்சியது வெறும் 1000 ரூபாய்தான்.ஆனால் நாம் கடைகளில் வாங்கும் கத்தரிக்காய் விலையோ கிலோ 30 ரூபாய்.இவற்றில் பண்ணையின் உரிமையாளர்கள் போடும் உழைப்பை என்றுமே சேர்ப்பதில்லை.விவசாயிக்கும் ,நுகர்வோருக்கும் இடையில் உள்ள இடைவெளியை இந்த இடைத்தரகர்கள் வசதியாக பயன்படுத்தி கொள்கின்றனர்.அந்த விவசாயி நாள் முழுவதும் சந்தையில் வைத்து விற்பனை செய்தால் கொஞ்சம் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யலாம்.ஆனால் வாழ்வியல் சூழ்நிலை அந்த வாய்ப்பை தங்களுக்கு கொடுப்பதில்லை என கூறுகின்றனர்.சந்தைபடுத்துதல் ஒவ்வொரு விவசாயிகளின் முன் நிற்கும் மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது!

1908369_835072746571387_3490076826765092314_n 11150784_835072736571388_3000436904501248236_n

இந்த சூழ்நிலையில் எங்களால் முடிந்த உதவிகளை இரண்டு நாட்களும் செய்ய முடிந்தது அவர்களுக்கு சற்று நம்பிக்கையாகவும்,எங்களுக்கு நல்லதொரு கற்றல் அனுபவமாகவும் இருந்தது.

Advertisements

4 comments on “TWA – Alathoor Volunteering Event – 16th & 17th of May 2015

  1. I am not sure whether the produce is grown organically. If yes, can they not route it through restore or Organic Farmer’s market for a better price ?

  2. we are concerned about brokers and people who help in marketing the agricultural produce.Actually if agriculturist/producer takes to marketing he will involve in heavy expenditure by way of marketing establishment and skills with more men power.Normally villagers do not involve in marketing due to lack of man power and infrastructure and storage/space constraints.A marketing person gets his profit as comission and villager for his produce and work.Can villager himself do marketing?
    Find a way in this area..We find fault/accuse marketing people since villagers are not used to direct marketing.Can they be trained in this area?If this happens thousands of marketing men/brokers/intermediaries who are also part of the system will loose their daily earnings. G.PARTHASARATHY

    • Sure sir. We will think on this aspect also. Kindly let us know if you have any suggestion for this problem.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: