3 Comments

The Weekend Agriculturist குழுவினர் ஆலத்தூர் கிராமத்து விவசாயிகளுடன் ஒரு கலந்துரையாடல்

TWA குழுவினர் ஆலத்தூர் கிராமத்து விவசாயிகளுடன் கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்தோம்.கடந்த சில மாதமாக முயற்சி செய்து பார்த்தோம் .ஆனால் அவர்களை ஒன்றிணைக்க மிகுந்த சிரமமாக இருந்தது.தற்போதும் அதே பிரச்சனையே ! பிறகு நாங்கள் அனைவரும் விவசாயி வீட்டிற்க்கும் ,அவர்கள் வேலை செய்யும் வயலுக்கும் நேரிடையாக சென்று குறைந்தபட்ச விவசாயிகளிடம் தற்போது அவர்கள் எதிர்கொண்டு வரும் அவர்களுடான அனுபவ பகிர்தலை கேட்டோம் .நாங்கள் சந்தித்த விவசாயிகள் அனைவரும் ரசாயன விவசாயிகள் தான் ! கடந்த 50 வருடங்களாக விவசாயம் செய்து வந்த மூத்த விவசாயி ஒருவர் கூறும் போது பல்வேறு பிரச்சனைகளை பட்டியலிட்டார்.,
1.தாங்கள் உற்பத்தி செய்யும் பொருளுக்கு சரியான விலை கிடைப்பதில்லை.பத்து வருடங்களுக்கு முன்னர் என்ன விலையோ ,அதே விலைதான் இன்றும் விற்கிறது.ஆனால் இடுபொருட்களின் செலவு மட்டும் வருடம் தோறும் கூறி கொண்டே செல்கிறது .
2.பயிர்களுக்கு அடிக்கபடும் மருந்துகளுக்கு விலை அதிகரித்து கொண்டே செல்கிறது
3.முன்னர் எல்லாம் விவசாயத்திற்காக வளர்க்கப்பட்டு வந்த மாடுகள் தற்போது இறைச்சிகாகவே வளர்க்கப்பட்டு வருகின்றன.அதனால் மாடுகளை தங்களது வீடுகளில் கட்டி வைக்காமல் அவிழ்த்து விட்டு விடுகின்றனன்ர்.அவை பயிர்களை நாசம் செய்கின்றன.கேட்டால் சண்டைதான் வருகிறது.இந்த கிராமத்தில் மாடுகளின் தொல்லைதான் பெரிதாக உள்ளது .சுற்றி வேலி அடைக்காவிட்டால் இங்கு பயிர் செய்வது கடினமே !
4.சென்னைக்கு கிருஷ்ணா நீர் கொண்டு செல்ல கட்டப்பட்ட நீர் வழித்தடத்தில் ஏராளமான விளைநிலங்கள் பறிக்கப்பட்டு விட்டன.அவற்றிற்கு உரிய தொகையை அரசாங்கம் கொடுக்க வில்லை.
5.விளைநிலங்கள் பாதிக்கப்படுவதை பற்றி ஊராட்சி தலைவரிடம் முறையிட்டால் ,நிலங்களை விற்றுவிட்டு செல்லுங்கள் என கூறும் அவல நிலையே இங்கு நடக்கிறது.
6.விவசாயிகள் என்றுமே ஒன்றுபடுவதற்கு முயலமாட்டார்கள் .நூறுநாட்கள் வேலையினால் பெரும்பாலான ஆட்கள் விவசாயம் செய்ய வருவதில்லை.வேலை ஆட்கள் பிரச்சனை மிகபெரியது .தங்களால் தனியாகவும் செய்ய முடியவில்லை .இவற்றினாலேயே நான் இருக்கும் இடங்களை எல்லாம் விற்றுவிட்டு ஏதோ கொஞ்சம் இடத்தில் விவசாயம் செய்து வருகிறேன் என கூறினார்.நாங்கள் பேசிகொண்டிருக்கும் போதே அருகில் வேலைசெய்து கொண்டு இருந்த நபர்கள் (இரண்டு வருடங்களுக்கு முன்னர் இவர்களும் விவசாயிகளாக இருந்தனர்) மேற்கூறிய கருத்தை ஒட்டி தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்கள்.
மேலும் சில விவசாயிகளை சந்தித்தோம் .மல்லிகைபூ தோட்டத்து விவசாயி கூறும் போது,தான் 35 செண்டில் விவசாயம் செய்து வருகிறேன்.தினமும் பூ பறித்து விட வேண்டும் .ஒவ்வொரு நாளும் விலை மாறிக்கொண்டே இருக்கும்.அதனை பொறுத்தே எங்களுக்கு இலாபம் கிடைக்கும் .வாரத்திற்கு இரண்டு முறையாவது பூச்சிமருந்து (பூச்சிகொல்லி) தெளித்து விடுவேன் என கூறினார்.

பூச்சி மருந்து அடிப்பதால் உங்கள் உடலுக்கு பாதிப்பு ஏற்படுமே என கேட்டதிற்கு ,ஆமாம்! பாதிப்புதான் !என்ன செய்வது ! பூச்சிகளை காட்டு படுத்த வேண்டுமே என்றார்! காலையில் மல்லிகை பூ விற்பனைக்கு செல்கிறது என்றால்,முதல் மாலை மருந்து தெளித்தே அறுவடை செய்கின்றனர் !

மற்றொரு விவசாயி வீட்டிற்க்கு சென்றபோது வீட்டை சுற்றி கனகாம்பரம் ,பச்சைமிளகாய் ,கத்தரிக்காய் ..என பயிரிட்டு இருந்தனர் .அவர்களும் விவசாய நிலங்களை விற்றுவிட்டு தற்போது சிறிய அளவில் வீட்டில் செய்து வருவதாக கூறினார்.பயிர்களுக்கு விஷ கொல்லியையே தெளித்து வருகின்றனர்.


11270421_835364533208875_5213896230393489984_o

இவர்கள் அனைவரிடத்திலும் இயற்கை முறையில் விவசாயம் செய்வதை பற்றிய தவறான புரிதலே இருக்கின்றது.இயற்கை விவசாயம் என்றால் ஒன்றும் செய்ய வேண்டாம் என்ற மனநிலையில் இருகின்றனர் .மேலும் ஏற்கனேவே நொடிந்து செய்து கொண்டு இருக்கும் ரசாயன விவசாயத்தினால் ஏற்படும் பாதிப்புகளை உள்வாங்கி கொண்டு இருக்கும் சமயத்தில் ,இயற்கையான முறையில் எப்படி இலாபகரமாக செய்ய இயலும் என்பதையே அவர்களின் ஐயமாக இருக்கிறது.நாங்கள் பூச்சிகளின் தாக்குதலை கட்டுப்படுத்துவதற்கு பூச்சி கொல்லிகளுக்கு பதிலாக ,இயற்கையான முறையில் மேற்கொள்ளும் (இஞ்சி ,பூண்டு ,பச்சைமிளகாய் கரைசல் போன்ற …)உத்திகளை எடுத்து கூறினோம் .மேலும் அமிர்தகரைசல் ,பஞ்சகாவ்யா போன்ற பயிர்களின் வளர்ச்சிக்கு உதவும் முறைகள் பற்றியும் அவர்களுடன் உரையாடினோம்.அவற்றை ஆச்சரியமாக கேட்டறிந்த அவர்கள்,இது சாத்தியமா என வினவினர்.

நாங்கள் அடுத்தமுறை பண்ணைக்கு வரும் போது நாங்களே உங்களுக்கு செய்து காட்டுகிறோம்.உங்களுக்கு ஐயம் இருப்பின் குறைந்தபட்ச இடங்களில் உள்ள பயிர்களில் செய்து பார்ப்போம் என கூறியதற்கு மகிழ்வோடு தலையசைத்தனர்.

ஏறக்குறைய கிராமம் முழுவது விவசாய நிலங்களாக இருந்த பகுதிகள் இன்று கான்கிரீட் கட்டிடங்களாகவும் ,செங்கல் சூலைகலாகவும் காட்சியளிகின்றன.மிக குறைவான அளவிலேயே தற்போது விவசாயம் செய்து வருகின்றனர் .நிறைய நபர்கள் நகர்த்தி ஒட்டிய வேலைகளுக்கு சென்றுவிடுகின்றனர் .இன்னும் சிலபேர் தங்களது நிலங்களை விற்ற பணத்தில் ,தொழில் செய்து பிழைத்து வருகின்றனர் .செங்கல் சூளைகளில் விழுப்புரம் பகுதிகளில் இருந்து வந்து,இங்கேயே தங்கி வேலை செய்து வருகின்றனர்.இவர்களில் பெரும்பாலோனோர் சொந்தமாக தங்களது இடங்களில் விவசாயம் செய்து வருகின்றனர்.விவசாயத்தினால் ஏற்பட்ட நட்டத்தினால் ,நிலங்களை விற்றுவிட்டு தற்போது இங்கு வந்து 12 மணி நேரத்திற்கும் மேலாக கூலி வேலை செய்து வருகின்றனர்.

ஏரிபாசன பகுதிகள் இன்று வறண்ட நிலமாக காட்சியளிகின்றன.நகரமயமாதலின் கோரபசிக்கு தற்போதைய தலைமுறைகள் பலியாகி வருவதால் இவர்களுடன் ,இந்த கிராமத்து விவசாய நிலங்களும் பலியாகிவிடும் நிலைமையே தென்பட்டு வருகிறது.

மேலும் விவசாயத்தை வெறும் இலாபம் வரும் தொழிலாகவே பார்த்து வரும் இவர்கள் ,ரசாயன விவசாயத்தால் ஏற்படும் உடலியல் பிரச்னையை சிறிதும் உணரவில்லை.மேலும் ரசாயன விவசாயத்தில் உள்ள பிரச்சனைகளை ,இயற்கை விவசாயம் செய்வதற்கான சரியான வழிமுறைகளை இங்கு எடுத்து சொல்வதற்கான நபர்கள் இல்லை என்பது வேதனையான உண்மை !

இந்த விவசாயிகளின் சந்திப்பிற்கு பெரிதும் உதவியதோடு அல்லாது,அங்கு விவசாயிகள் சந்தித்து வரும் இன்னல்களை மிக பொறுமையாக எடுத்து கூறிய சேகர் என்ற விவசாயிக்கு மிகப்பெரிய நன்றிகள்.

தொடர்ந்து பயணிப்போம் ……………

11255844_835364506542211_7975297997820441589_o

தமிழ்ச் செல்வன்

tamilnature23@gmail.com

Advertisements

3 comments on “The Weekend Agriculturist குழுவினர் ஆலத்தூர் கிராமத்து விவசாயிகளுடன் ஒரு கலந்துரையாடல்

  1. What is the procedure for joining in such events. I am interested in volunteering for such initiatives. Kindly do let me know if you need any more details. Call me @ 9962 543 420

  2. Please join our google groups to get mail invites for events and other updates.

    https://groups.google.com/forum/#!forum/theweekendagriculturist

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: