Leave a comment

பல்லுயிர் வாழும் பசுமை வனம் [மூங்கில் கொம்பை] :

TWA சார்பாக coop Forest சென்று இருந்தோம்.தர்மபுரியில் இருந்து 25 கி.மீ தொலைவில் உள்ளது.மிகவும் அழகான ,அமைதி நிறைந்த ஒரு பசுமை சோலை.செல்லும் வழி எங்கும் மூங்கில் காடுகள்.இவை செயற்கையாக பல மனிதர்களின் உழைப்பினால் விளைந்த காடுகள்.மூங்கில் கொம்பை என்றால்தான் அருகில் உள்ள மக்களுக்கு தெரியும் .பொதுவாகவே தருமபுரி வறண்ட நிலப்பகுதி.அதிலும் கடந்த 3 வருடங்களாக மலையின் அளவு மிக குறைவு.இருப்பினும் சரியான நீர் மேலாண்மையை கையாளுவதால் ,ஏராளமான மரங்களை உயிர்பிக்க வைத்து இருக்கிறார்கள்.8 வருடங்களுக்கு முன்னர் வெறும் மலைக்குன்றாக காட்சியளித்த இடத்தை இன்று ,பல்லுயிர்கள் வாழும் பசுமை சோலையாக மாற்றி உள்ளதில் பியுஷ் மானுஷ் என்ற மனிதருக்கு பெரும் பங்குண்டு.

TWA- Coop Forest Visit

பண்ணையை சுற்றிலும் ஏறத்தாழ 20 பண்ணைகுட்டைகள் காணபடுகின்றன.அவை ஒன்றோடொன்று தொடர்பு கொண்டு உள்ளன.கடந்த செப்டம்பர் மாதம் பெய்த ஒரு பெருத்த மழைக்கு பிறகு ,மழையே இல்லை எனவும் இருப்பினும் அந்த மழை நீரே கடந்த 8 மாதங்களாக பயன்பாட்டில் உள்ளது என கூறும் போது,அவர்கள் மேற்கொள்ளும் நீர்மேலாண்மையை முழுவதுமாக அறிந்து கொள்ள இயலும். பண்ணையில் உள்ள வீடுகள் அனைத்தும் மண் மற்றும் மூங்கில் பயன்படுத்தி அமைக்கப்பட்டுள்ளது.கட்டுமானத்திற்கு எந்த பொருட்களும் வெளியில் இருந்து வரகூடாது எனவும் ,இருப்பதை பயன்படுத்தி ,சுற்றுசூழலுக்கு ஏற்ற ,அதிக வெப்பத்தை வெளிபடுத்தாத வடிவமைப்புடன் கூடிய வீடுகளை அமைத்து உள்ளனர்.மூங்கில் மரங்களின் மூலம் நாம் அன்றாடம் பயன்படுத்தும் (கட்டில்,பீரோ .நாற்காலி ,போன்ற )ஏராளமான பொருட்களை உருவாக்கியுள்ளனர்.coop forest 2

மலை சரிவு பகுதியாக இருப்பதால் ,மண் அரிப்பை தடுக்க கற்கள் மூலம் ஆங்காங்கே தடுப்புகளை அமைத்து உள்ளனர்.
வேளாண்மையும் அங்கு செய்யபடுகிறது,மானாவாரி நிலங்களுக்கு ஏற்ற சிறுதானிய பயிர்கள் விளைவிக்க படுகிறது(தற்போது கடும் வறட்சியினால் ,தானியங்கள் பயிரிடபடுவதில்லை ),அங்கு செல்லும் அனைவருக்கும் அங்கு விளைந்த சிறுதானிய உணவுகளே பெரும்பாலும் பறிமாறபடுகிறது.ஏராளமான மருத்துவ குணமிக்க மரங்களும் ,வாழை ,முருங்கை ,அரப்பு,வேங்கை ,சிறுவாரை மூங்கில் ,ஆவாரம்பூ ,கொய்யா,சோற்று கற்றாழை மற்றும் காய்கறி பயிர்களும் நிறைந்து காணப்படுகிறது.பண்ணை முழுவதும் உயிர்வேலியாக யானை கற்றாழை வைக்கப்பட்டுள்ளது.அனைத்து தாவரங்களும் ஒருவேளை மழைக்காக காத்து கொண்டிருக்கின்றன.

coop forest 3அதிகாலையில் மயில்களின் அலார சத்தமும் ,குயில்களின் ரீங்காரமும் மற்றும் ஏராளமான விதவிதமான பறவைகளின் ஒலி சத்தங்களும் நம்மை புன்னைகையோடு எழுப்புகின்றன.நாங்கள் கற்களை கொண்டு அணைகட்டும் வேளையில் ஈடுபட்டு கொண்டிருக்கும் போது ஏராளமான சிறிய உயிரினங்களை காண முடிந்தது.நண்டுகள் ,தேள்கள் ,பெரிய மரவட்டைகள் ,பொறிவண்டுகள்,போன்ற சிறிய உயிரினங்கள் இயற்கை தாயின் மடியில் தவழ்ந்து கொண்டு இருந்தன.ஒரு தனிமனிதன் நினைத்தால் ,மக்களை இணைத்து பாலையை பல்லுயிர்கள் வாழும் சிறந்த பசுமை சோலையாக மாற்ற இயலும் என்பதற்கு நம் அனைவருக்கும் சிறந்த உதாரணம்.

எதற்காக இந்த இடத்தை தேர்வே செய்தீர்கள் என பியுஷிடம் கேட்ட போது ,எதுவுமே இல்லாத பகுதியை, சோலையாக மாற்றி காண்பிப்பதன் மூலமே உழவர்களுக்கு சிறந்த நம்பிக்கையினை அளிக்க முடியும் என புன்னைகையுடன் கூறினார்.அவரது நம்பிக்கை சாத்தியமானதை கண்கூடாக உணரமுடிந்தது.அனைவரும் குடும்பத்தோடு சென்று ,இந்த பல்லுயிர் இயற்கை சோலையை ரசித்துவிட்டு வருவதோடு நில்லாமல் உங்களால் முடிந்த உதவிகளை ,பொருளாகவோ அல்லது செயலாகவோ செய்துவிட்டு வாருங்கள்! ஏனெனில் இவை பல மனிதர்களின் கடும் உழைப்பினால் உருவாக்கப்பட்டவை.மேலும் உதவிகள் தேவைபடுகிறது. நமது சூழலை மீட்டு எடுப்பதில் நமக்கும் மிகப்பெரிய பங்குண்டு என்பதில் மாற்று கருத்து இல்லை !

நன்றி : பியுஷ் மானுஷ் (தொடர்புக்கு : 9443248582)மற்றும் முருகேசன்
நன்றி : உமாசங்கர் (தளிர்கள் அமைப்பு )

Address : Coop Forest,Moongil Kombai,
Nekkundhi,Opp. Nagavathy Dam,
Dharmapuri District,
Tamil Nadu,India.

Coop Forest Website : http://aaranyacoopforest.com/

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: