1 Comment

விரக்தி நிலையில் விவசாயிகள்

விரக்தி நிலையில் விவசாயிகள் (TWA குழுவினர் விவசாயிகளுடன் ஒரு கலந்துரையாடல் ) :

TWA சார்பாக திருநின்றவூர் அருகே உள்ள ஆலத்தூர் கிராமத்திற்கு விவசாயிகளுடன் இணைந்து களப்பணியாற்ற சென்று இருந்தோம் .பணியின் ஒரு பகுதியாக அங்குள்ள விவசாயிகளை சந்திப்பதற்கு சென்றோம். முதலாவதாக நம்மாழ்வார் அய்யாவிற்கு அங்குள்ள விவசாயிகளுடன் இணைந்து அஞ்சலி செலுத்தினோம் .பின்னர் அய்யாவை பற்றிய சில தகவல்களை அவர்களுடன் பகிர்ந்து கொண்டோம் . பின்னர் எங்களை அவர்களுக்கு அறிமுகபடுத்தி விட்டு ,அந்த ஊரில் உள்ள விவசாயிகளின் பிரச்சனை பற்றி தெளிவாக எடுத்துரைக்குமாறு வேண்டுகோள் விடுத்தோம் .நீண்ட நாட்களுக்கு பிறகு ஆலமரத்தில் அமர்ந்து ,அவர்களுடன் எங்கள் கலந்துரையாடலை தொடர்ந்தோம் .பெரும்பாலான விவசாயிகள் தாங்கள் சிறிதும் விருப்பம் இல்லாது இந்த தொழிலை செய்து வருகிறோம் என கூறினர் .அவர்கள் அனைவரும் பொதுவாக முன்வைத்த பிரச்சனைகள் இதோ :
1. நூறுநாள் வேலைவாய்ப்பு திட்டம்
2. தண்ணீர் பிரச்சனை
3.மின்சார பிரச்சனை
4.வேலைக்கு ஆட்கள் இல்லாமை ,
5.பருவநிலை மாற்றம்
6. ரசாயன உரங்களின் அதிகபடியான விலையேற்றம்
7. கூலி ஆட்களின் அதிகபடியான சம்பளம்
8. இயந்திரங்களின் அதிகபடியான வாடகை
9.உற்பத்தி பொருட்களுக்கு சரியான விலை நிர்ணயம் இல்லாமை,
10.பூச்சிகளின் தொடர் தாக்குதல் ,
11. எலிகளின் தொல்லை
12.அரசாங்கங்களின் மானியங்கள் சரிவர கிடைக்காமை
13. மேலும் ஒரு விவசாயி எலி தொல்லையால் தன்னுடைய நெல் விவசாயம் பெரும் இழப்பை தருகிறது என வருத்ததுடன் கூறினார் .

1600274_565188956893102_457140745_n

இது போன்ற ஏராளமான பிரச்சனைகளை அவர்கள் பட்டியலிட்டனர் .மேலும் அரசாங்க அதிகாரிகள் கடைசியாக 3 மாதங்களுக்கு முன்னர் குறை தீர்ப்பு முகாம்நடத்தி தங்களது பிரச்சனைகளை கேட்டறிந்தனர் .ஆனால் இன்று வரை எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை எனவும் ,மானியம் பெறுவதற்காக மாத கணக்கில் அலைய விடுகின்றனர் எனவும் கூறினர். .இந்த பிரச்சனைகளை களைய என்னதான் உடனடி தீர்வு என அவர்களிடம் கேட்ட போது பலரிடம் பதில் இல்லை .சில பேர் தங்கள் கிராமத்தில் கூட்டுறவு சங்கம் அமைப்பதன் மூலம் தங்களது பொருட்களை அருகிலேயே விற்று கொள்ள ஏதுவாக அமையும் என்றனர் .சிலர் தண்ணீர் ,மின்சார பிரச்னையை களைவதன் மூலம் ஏதோ கொஞ்சம் உபயோகமாக இருக்கும் எனவும் கூறினர். மழை பெய்தால் நன்றாக இருக்கும் என்றனர் .மேலும் சில கேள்விகள் இதோ !

கேள்வி : ஆட்கள் பற்றாக்குறை எதனால் ஏற்படுகிறது ?

விவசாயி 1 : எல்லாரும் நூறு நாள் வேலைக்கு சென்று விடுகின்றனர் .

விவசாயி 2 : விவசாய கூலி மிக அதிகமாக இருக்கிறது .4 மணி நேரம் வேலை செய்தால் கூட நபர் ஒருவருக்கு 400 ரூபாய் மற்றும் ஒருவேளை உணவு கொடுக்க வேண்டும் . இது எங்களுக்கு கட்டுபடியாக வில்லை .

விவசாயி 3 : நிரந்தர வருமானம் உள்ள தொழிலை நோக்கி சென்று விடுவதால் ஆட்கள் கிடைபதில்லை .

கேள்வி : உங்கள் பிள்ளைகளை ஏன் விவசாயத்தில் ஈடுபடுத்த முயலவில்லை ?

விவசாயி : அவர்கள் யாரும் விவசாயத்தில் ஈடுபட சிறிதும் விருப்பமில்லை .சிறு வேலைகளை கூட செய்வதில்லை என ஆதங்கபட்டனர் .சிலர் தாங்கள் பட்ட கஷ்டத்தை அவர்களுக்கு அளிக்க விரும்பவில்லை என கூறினர் .எல்லோரும் நீடித்த வருமானம் உள்ள தொழிலை நோக்கி சென்று விட்டனர் .அவர்களை இதில் ஈடுபடுத்துவது கடினம் என்றனர் .

கேள்வி : ஏன் இயற்கை விவசாயத்தில் ஈடுபட முயலவில்லை ? அதில் நீங்கள் சந்திக்கும் பிரச்சனை என்ன ? எருது உரங்களை இடுவதில்லை ஏன் ?

பதில் 1: அவை சாத்தியமில்லாதது .செலவு அதிகம் எடுக்கும் .அதிக மக சூலை பெற்று தராது .

பதில் 2 : இயற்கை விவசாயம் என்பதே எங்களுடைய விருப்பம் .ஆனால் அவை தற்போது அவ்வளவு எளிதில்லை .மாடுகளை எல்லாம் விற்றுவிட்டோம் . மேலும் மாடுகள் இருந்தால் அதை மேய்பதற்கு யாரும் ஆட்கள் இல்லையப்பா ! அந்த காலத்தில் எங்களுக்கு எல்லாம் அவ்வளவு எளிதில் ,நோய் நொடிகள் அண்டாது .நீண்ட ஆயுளை பெற்றோம் .ஆனால் இந்த ரசாயனம் கலந்த உணவினால் தற்போது ஏராளமான நோய்கள் உண்டாகிறது .இருந்தும் அதைநோக்கி செல்ல முடியவில்லை .

பதில் 3 : அதை பற்றிய போதிய விழிப்புணர்வு இல்லை . அரசாங்கங்களும் ரசாயன வேளாண்மையை தான் ஊக்குவிக்கிறது .

கேள்வி : ஊரில் நிறைய செங்கல் சூளைகள் தென்படுகின்றன .நிறைய விவசாய நிலங்கள் மண் வெட்டப்பட்டு நிலையில் கிடக்கின்றன . நிலங்களை அழித்து வருகிரிர்களே ?

பதில் : எங்களுக்கு அப்போது அதில்தான் நல்ல வருமானம் கிடைத்தது .அதனால் எங்கள் நிலங்களில் உள்ள மண்ணை எடுத்து கொடுத்தோம் .

கேள்வி : நாங்கள் உங்களுக்கு எந்த விதத்தில் உதவ வேண்டும் ?
விவசாயி 1 : நீங்கள் வாரம் ஒருமுறைதான் வருகிறீர் . மற்ற நாட்களில் நாங்கள் எப்படி சமாளிப்பது !

விவசாயி 2 : அரசு மானியங்களை எளிதில் பெற உதவி புரிந்தால் நன்றாக இருக்கும் .மேலும் நீங்கள் எங்களுடன் இணைந்து பணிபுரிவது மிகவும் உதவியாக இருக்கும் .

கேள்வி : விவசாய நிலங்கள் எல்லாம் ரியல் எஸ்டேட் ஆக்கபடுகிறதே ?

விவசாயி : என்ன பண்ணுவது ! எங்களால் மேற்கொண்ட பிரச்சனைகளால் விவசாயத்தை தொடர முடியவில்லை .நிலத்தை சும்மா வைத்து இருபதற்கு பதில் அவர்களிடம் கொடுத்தால் நல்ல பணம் கிடைக்கிறது .

கேள்வி : இப்படி எல்லோரும் விவசாயத்தை விட்டு வெளியேறினால் வரும் காலங்களில் நாம் உணவிற்கு என்ன பண்ணுவது ?

பதில் : பல பேரிடம் சரியான பதில் இல்லை .

விவசாயி 1: முதலில் நமது அரசாங்ககளுக்கு அதை பற்றிய எண்ணம் வேண்டும் . கடும் நெருக்கடிகளுக்கு இடையில் தான் விவசாயம் பண்ணி வருகிறோம் .

விவசாயி 2: தற்போதைக்கு எங்கள் வாழ்வுகே வழி இல்லை ,நாங்கள் எப்படி வரும்காலத்தை பற்றி யோசிப்பது .

விவசாயி 3: அப்போதுதான் எங்களின் அருமை மற்றவர்களுக்கு தெரியும் .உணவுக்காக முழுவதுமாக வெளிநாடுகளில் கையேந்தும் நிலை வரும் .

அவர்கள் சொல்லாத ஒரு பிரச்சனை டாஸ்மார்க் !
அவர்களின் பெரும் வருமானம் அங்கேயே செல்கிறது . மேலும் யாரும் ஒருங்கிணைந்து செயல்பட விருப்பமில்லை . தாங்கள் நிலத்தில் அவர்களே வேலை செய்வதற்கு விருப்பமில்லை .அந்த கடின உழைப்பு எல்லாம் மரணித்து வருகிறது .வாய்ப்பு கிடைத்தால் எப்போது விவசாயத்தை விட்டு வெளியேறலாம் என்ற நிலையிலேயே பலரும் இருக்கின்றனர் .ஒரு சில விவசாயிகள் மட்டும் என்னதான் வருமானம் கிடைக்க வில்லை என்றாலும் ,தங்களால் விவசாயத்தை விட்டு வெளிவரமுடிய வில்லை என்பதை தெரிவித்தனர் . பலரும் அறியாமையில் ,போதிய விழிப்புணர்வு இல்லாமல் இருப்பது தெரிய வந்தது .

அவர்களுடைய பல கேள்விகளுக்கு எங்களால் பதில் கூற முடியவில்லை . எங்களின் விவசாயம் பற்றிய அனுபவமின்மையும் ,முதல் முறை சந்திப்பும் ஒரு காரணம் . வரும் நாட்களில் அதனை சரிசெய்து கொள்ள முயலுவோம் . அவர்களிடம் இருந்து நிறைய விசயங்களை கற்று கொண்டோம் .அவர்களுடன் சந்திப்பின் இறுதியில் எங்களால் முடிந்தவரை உங்களுக்கு எல்லா வகையிலும் உதவி புரிவோம் என்ற நம்பிக்கையை கொடுத்தோம் .பல பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வு எங்களிடம் இல்லை .ஆனால் எங்கள் அனைவரிடமும் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றத்தை கொண்டு வர முடியும் என்ற நம்பிக்கை இருந்தது . விவசாய பிரச்சனைகளை பற்றிய ஒரு தெளிவான பார்வை கிடைத்தது .மேலும் பல விவசாயிகளை சந்திக்க வேண்டும் . நல்ல முறையில் ,வருமானதுடன் விவசாயம் செய்யும் மனிதர்களை அடையலாம் கண்டு ,அவர்களை கொண்டு இவர்களுக்கு ஒரு நம்பிக்கையை அளிக்க வேண்டும் என நினைக்கிறன் .அவர்கள் பிள்ளைகளை விவசாயத்தை நோக்கி திருப்ப வேண்டும் (சிறு சிறு உதவிகள் புரியலாம்,விடுமுறை நாட்களில் பெற்றோருடன் இணைந்து பணிபுரியலாம் )

1521750_565181406893857_1170858304_n

விரக்தியின் நிலையில் இருக்கும் அவர்களிடம் நாம் ஆறுதல் கூறுவதை விட ,அவர்களிடம் இணைந்து பணிபுரிந்து சிறு மனமாற்றதை ஏற்படுத்தி நம்மால் முடிந்த ஒரு நல்வழியை,நம்பிக்கையை ஏற்படுத்தி கொடுப்பதே சிறந்ததாக இருக்கும் . எப்போதும் பிரச்சனைகளை தெளிவாக முன்னிறுத்தும் நாம் ,ஏனோ அதற்கான தீர்வை நோக்கி செல்வதில்லை .இன்னும் பேசிக்கொண்டே தான் இருக்கிறோம்.பேச்சை குறைத்து செயலில் இறங்குவோமாக !

பதிவு சம்பந்தமாக உங்களின் கருத்துகளை பகிரவும்! தவறு இருந்தால் மன்னிக்கவும் .

Author:

தமிழ்ச் செல்வன்

Advertisements

One comment on “விரக்தி நிலையில் விவசாயிகள்

  1. விவசாயத்தின் இந்த நிலை மற்ற முடியாது . மாற்றவே முடியாது. அரசாங்கத்தின் போக்கு மாறினாலும் இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்காது. காரணம் நம்மவர்களுக்கு உழைக்க வேண்டும் என்ற எண்ணமும் விவசாயத்தின் முக்யத்துவம் மறைந்து போய் விட்டது.சுலபமாக எல்லாமே கிடைக்கும் போது நான் ஏன் உழைக்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி விட்டது . பட்டணம் போன கூலி வேலை செயிஞ்சா வல்லிசா முந்நூறு ரூவா கிடைக்கும்.ரெண்டு டீ இனமா கிடைக்கும் . சமயத்திலே பஸ்சுக்கும் காசு. நான் ஏன்யா வெயில் கிடந்து முதுகு வளைஞ்சி அல்லாடனும் . விவசாயம் எளிதான வேலை அல்ல . ஆனால் கண் மூடி மௌனித்து இருந்தால் தானாக விவசாயம் சார்ந்த பிரச்சனைகள் தீர்ந்திடும் என அனைத்து படித்த மேதாவிகளும் அரசியல்வாதிகளும் நினைத்து கொண்டுள்ளனர் . கண் திறந்து பார்கையில் விவசாயம் “மர் கய ” செத்து போய்விட்டு இருக்கும் . எப்படி ? அண்டை கட்டுதல் ,நெல் தூற்றுதல்,கலை எடுக்கும் நேர்த்தி ,முறத்தை உபயோகிக்கும் முறைகள், வானம் நோக்கி மழை வருமா வரதா என கணித்திடும் கலை, இன்னமும் எவ்வளவோ விவசாயம் சார்ந்த கலைகள் அல்லது தொழில் நுட்பங்கள் மறைந்து விட்டிருக்கும் . கலையை சொல்லி தர ஆட்களே இருக்க மாட்டார்கள் . பிறகென்ன விவசாயம் கேள்வி குறி ஆகிடும் நினைகிறீங்களா ? ஆகாது . அவசரமாக திட்டம் தீட்டுவார்கள் . அப்போது கண்டிப்பாக விளை பொருட்களுக்கு விலை கிடைக்கும் . பாக்கத்தான் போறீங்க . இன்றைய இளைஞர்கள் நீங்கள் சொல்வீர்கள் ” நாங்கெல்லாம் காலேசு படிக்கையெலெ ப்ளேட் இட்லி 24ரூவாய் யாக்கும் ” அப்பிடீன்னு நீங்க பேசுவீங்க . நான் இட்லி ஒன்னு 7 பைசாவுக்கு வாங்கினேன் . இன்னைக்கு ப்ளேட் 30 ரூவா .

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: