Leave a comment

நம்மாழ்வாரிடம் இருந்து நாம் கற்க வேண்டியவை

nammalvarநேற்று அய்யாவின் இறுதி சடங்கில் கலந்து கொள்வதற்காக என் நண்பனுடன் வானகம் சென்று இருந்தேன் .அய்யாவின் உடல் வானகத்தில் அவரது விருப்பபடி அவர் கடைசியாக வாழ்ந்த இடத்திற்கு அருகிலேயே மண்ணோடு கலக்க பட்டு விட்டது . மண்ணோடு வாழ்ந்து பழக்க பட்டுவிட்ட அந்த மனிதனுக்கு இவை இயல்பான ஒன்றே .அவரது உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் அவரது விருப்பபடி ஒரு வேப்ப மரக்கன்று நடப்பட்டது .ஏராளமான விவசாய பெருமக்கள் ,அரசியல் கட்சியினர் ,கிராமத்து மக்கள் முன்னிலையில் அவரது வழிமுறையை பின்பற்றி நடப்போம் ,அவரது கனவை நினைவாகுவோம் என்ற உறுதி மொழியோடு அடக்கம் செய்யப்பட்டு விட்டது .

பின்னர் வந்திருந்த பெருமக்கள் அய்யாவுடான தங்களது அனுபவங்களையும் ,இனிமேல் அனைவரும் எவ்வாறு இணைந்து செயல்பட வேண்டும் எனவும் தங்களது கருத்துகளை பகிர்ந்து கொண்டனர் . அரிச்சலூர் செல்வம் அய்யா அவர்கள்தான் கடைசிவரை முன்னின்று நடத்தினார் .அவரின் மனைவியிடம் பேசியதில் இருந்து அவர் தன இறப்பிற்கு பின் எந்தவொரு சம்பிரதாயங்களையும் பின்பற்ற வேண்டாம் எனவும் ,தன்னுடைய பார்வையில் ஆண் ,பெண் என தனியாக பிரித்து பார்த்ததில்லை என்று அடிக்கடி கூறுவார் என்று சொன்னார்.இறுதியாக வந்திருந்த அனைவரும் அய்யாவின் நினைவாக ஒரு மரகன்றினை எடுத்து சென்றனர்.

Houseஅய்யா அவர்கள் ஒரு தனி மனிதராக தான் வாழும் காலத்தில் மிகப்பெரிய மாற்றத்தை மக்களிடையே விதைத்துள்ளார்.அவரது பணியை அவர் நிறைவாகவே செய்துள்ளார் . விவசாயம் தாண்டி ,மனிதனின் வாழ்வியல் அமைப்பு ,புவி வெப்பமடைதல் ,இனி தமிழகம் சந்திக்க போகும் தண்ணிர் பிரச்சனை,சுற்றுசுழல் பாதிப்பு போன்ற எண்ணற்ற விஷயங்களை மக்களிடம் எடுத்து சென்றுள்ளார் .பல பேர் சொல்லியும் ஓய்வெடுகாது ,தன் உடல்நிலையை சிறுதும் பொருட்படுத்தாது ,அறியாமையில் இருக்கும் தன் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் கடைசிவரை போராடிய அவரின் மனஉறுதியை கண்டு ,இயற்கை அன்னையே மனமிறங்கி இந்த நிரந்தர ஓய்வை அவருக்கு அளித்துள்ளது.

ஒரு தனிமனிதனே எல்லா மாற்றத்தையும் கொண்டு வரவேண்டும் என்ற நம்முடைய எண்ணத்தில் பார்த்தால், அவருடைய இழப்பை எளிதில் ஏற்றுகொள்ள முடியாதுதான் .ஆனால் ஒரு முழு சமூகம் பயனடைய வேண்டுமெனில் நம் எல்லாருடைய பங்கும் அவசியமானது என்பதில் மாற்று கருத்து இல்லை.வரும் தலைமுறையினர் தெரிந்துகொள்ள அவரின் எளிமையான இயற்கையோடு இணைந்த வாழ்க்கை முறை ,அவருடைய கருத்துகள் நமது பாடபுத்தகத்தில் இணைக்கபடல் வேண்டும்.நோயில்லா வாழ்வை எப்படி பெறுவது ,என்றும் இளமையாக புத்துணர்ச்சியோடு இருப்பது எப்படி !என நாம் அவரிடம் இருந்து கற்றல் வேண்டும் .

nammalvar 1

அவரது வழிமுறையை ,அதன் தொடர்ச்சியை எடுத்துசெல்வதில் நமது கையில்தான் உள்ளது.நமக்கு உணவளிக்கும் விவசாயிக்கு நம்மால் இயன்ற அளவிற்கு உதவுவது நம் ஒவ்வொருவரின் கடமையாகும் . உடனே எல்லாரையும் வயலில் இறங்கி புரட்சியை ஏற்படுத்த சொல்ல வில்லை .நம்மளவில் ,எந்த வழிகளில் நமது உழவனுக்கு உதவ முடியும் என்பதை நமக்குள் வரையறுத்து கொண்டு அனைவரும் ஒன்றுபட்டு செயல்பட்டாலே போதும். அதைதான் அவரும் விரும்பினார் .

Author : தமிழ்ச் செல்வன்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: