Leave a comment

களத்துமேட்டில் எனது அனுபவம் :

இந்த வாரம் திருநின்றவூர் அருகே உள்ள ஆலத்தூர் கிராமத்திற்கு The Weekend Agriculturist சார்பாக விவசாயிகளுடன் இணைந்து எங்கள் கடமையை ஆற்ற சென்றோம் .முதலில் மிகுந்த ஆர்வத்துடன் தங்கள் கடமையை ஆற்றிய அனைத்து நண்பர்களுக்கும் நன்றி .ஆரம்பம் முதல் இறுதி வரை எதிர்பாராத பல இனிமையான தருணங்களை சந்திக்க நேர்ந்தது. இந்த தடவை ஏராளமான புதிய நண்பர்களை சந்தித்தேன் .பயணங்கள் எப்போதுமே மிகவும் அழகானது ,இந்தமுறை பல புதிய நண்பர்கள் அதனை மேலும் சுவாரசியம் மிக்கதாக மாற்றினார் .

72323_556657901079541_1921279056_n

எங்களுடைய இந்த ஒருநாள் பயணம் ஏராளமான அனுபவங்களை எனக்குள் ஏற்படுத்தியது .ஒவ்வொரு பயணமும் ,மனிதர்களும் ஏராளமான அனுபவங்களை நமக்கு கற்று கொடுக்கிறது. சனிக்கிழமை அன்று இரவு நாங்கள் கிராமத்தை சென்றடைந்தோம் .உதவும் நண்பர்கள் என்ற அமைப்பை நடத்திவரும் சாரதி அய்யா உடன் எங்கள் பணிகள் பற்றி நாங்கள் கலந்து ஆலோசித்தோம் .அவர் எங்களுக்கு அந்த ஊரின் விவசாயிகளை பற்றியும் (ஊரின் அனைத்து விவசாயிகளின் முழு விவரங்கள் அடங்கிய பட்டியலுடன் ) ,விளைநிலங்களின் தற்போதைய நிலையை பற்றி ,பயிர்வகைகள் பற்றியும் ஆழமாக எடுத்து கூறினார் . எல்லா விவரங்களுக்கும் சரியான புள்ளிவிவரத்தை பட்டியலிட்டார்.

தற்போதைய விவசாயத்தின் பிரச்சனையாக அவர் எடுத்துரைப்பது : மக்களின் அறியாமை ,நவீன யுகம் ஏற்படுத்திய சோம்பல் ,இலவச மாயம் ,வானிலை மாற்றங்கள் ,தற்போதைய தலைமுறையின் நகர்வு ,பொருளை மட்டுமே தேடிசெல்லும் வாழ்க்கைமுறை,மக்கள் இணைந்து செயல்படாமை ,அரசாங்க நிதிகள் சரியாக பயன்படுத்தாதது ,பாரம்பரிய விவசாய முறைகளை கைவிட்டது ,நிலத்தின் அளவு குறைந்து வருவது ,கால்நடைகளை ஏறக்குறைய இறைச்சிக்கு பலிகொடுத்தது, ….இது போன்ற பிரச்சனைகளை பட்டியலிட்டார் .அப்பிரச்சனைகளை ஆராய்ந்தால் நாங்கள் செல்ல வேண்டிய தூரம் இன்னும் நெறைய இருக்கிறது என தோன்றியது .மேலும் பிரச்சனை அரசாங்கத்திடம் மட்டுமில்லை எனவும் தெளிவாக உணர முடிந்தது .அரசாங்க மாற்றத்தை விட மக்களின் மனமாற்றமே தற்போதைக்கு தேவை என்பதை ஆணித்தரமாக கூறினார் .

1533957_556666584412006_2084449906_n

தற்போதைய நிலைமைக்கு இருக்கின்ற விவசாயிகளை ,நிலத்தைவிட்டு வெளியேறாமல் தடுப்பதும் ,இருந்கின்ற நிலங்களை பாதுகாப்பதும் நம்முன் இருக்கும் மிகப்பெரிய சவால் .அவை அவ்வளவு எளிதல்ல .இருந்தாலும் அதற்கான தீர்வை நோக்கி தெளிவான பார்வையோடு ,முழு முயற்சியோடு நாம் செல்ல வேண்டும் என்பதை உணர்ந்தோம் .அவரின் கலந்துரையாடலுக்கு பின்னர் நாங்கள் ஒருவருக்கொருவர் எங்களுக்குள் அறிமுகபடுதிகொண்டோம்
.நிறைய நண்பர்கள் இந்த பணிக்கு மிகுந்த ஆர்வத்தோடு வந்ததாக கூறினர் . மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது .நம்மால் நிச்சயம் மாற்றத்தை கொண்டுவர முடியும் என்ற நம்பிக்கையும் மலர்ந்தது .பிறகு நான்கு நண்பர்களுடன் தற்கால அரசியல் நிகழ்வுகளை பற்றி இரவு 2 மணி வரை விவாதித்தோம்.எங்களுக்கு தெரியாத நிறைய விசயங்களை ஒருவருக்கொருவர் தெரிந்துகொண்டோம் .அரசியலை தவிர்த்து விட்டு ஒரு மாற்றத்தை எதிலும் நிலையாக கொண்டு வர இயலாது என்ற கருத்தில் அனைவரும் தெளிவாக இருந்தோம். .
மறுநாள் காலை அனைவரும் பனிகளின் தரிசனதோடு , வேம்பின் சுவையை பற்களுக்கு அளித்துவிட்டு வயகாட்டை நோக்கி எங்கள் பயணத்தை தொடர்ந்தோம் .பயணத்தின் நடுவே அந்த ஊரின் செங்கல் சூலைகளும் ,பூத்து குலுங்கும் நெற்பயிர்களும் ,முட்புதர்களும் ,மண்ணின் மைந்தர்களாகிய கிராமத்து மனிதர்களும் ,வாய்கால் நீரும் ,காலம் கடந்து வந்த பறவைகளும் ,யாருடா இந்த இளைஞர்கள் கூட்டம் என்பது போல் எங்களை உற்று நோக்கினர்.சில இடங்களை தவிர ,எங்கும் பசுமையாகவே காட்சி அளித்தது. இறுதியாக களத்தை அடைந்தோம் .

581789_556667004411964_649934361_n

எங்களது பணி இரண்டு ஏக்கர் நிலம் முழுவதும் கொய்யா செடியை நடவேண்டியது . மற்றும் மற்றொரு நிலத்தில் மல்லிகை செடிக்கு களை எடுப்பது. செடிகள் வாங்கி நெடு நாட்கள் ஆகியும் ஆட்கள் இல்லாத காரணத்தால் கன்று நடமுடியவில்லை என அந்த நிலத்தின் விவசாயி கூறினார் .

நாங்கள் அவர்களுடன் இணைந்து பணிபுரிந்தது மிகவும் அவருக்கு உபயோகமாக இருந்தது.Surya Narmada (Horticulture specialist) அவர்கள் களத்தில் எங்களுக்கு அவ்வபோது சில ஆலோசனைகளை வழங்கினார் .ஏற்கனவே வண்டியின் மூலம் உழுது வைத்து இருந்தாலும்,மண் வறண்டுபோயிருந்ததால் சற்று கடினமாகவே இருந்தது . மேலும் எங்களின் பலபேருக்கு கடப்பாரை களும் ,மம்பட்டிகளும் சற்று புதியது என்பதால் சீக்கிரம் சோர்வை ஏற்படுத்தியது. அங்கு பணிபுரியும் போது அந்த மண் வாசனையும் ,அதற்கு ஏற்றாற்போல் வீசிய தென்றல் காற்றும் எங்களை மெய்மறக்க செய்தது . அங்கேயே இருந்துவிடலாம என தோன்றியது .இந்த நவீன உலகம் நம் மண்ணை ,நம் அடையாளத்தை தொலைத்து நம்மை தொலைதூரதிற்கு தள்ளி விடுகிறது என்பதை அங்கு உணர முடிந்தது .

வேலைகளுக்கு நடுவே காலை மற்றும் மதிய உணவை அந்த வயகாட்டிலேயே நண்பர்களுடன் உண்ட அனுபவம் எந்த நட்சத்திர ஓட்டல்களிலும் கிடைக்காத ஓன்று .அவ்வபோது ஏற்படும் சோர்வையும் ,அங்கு வீசிய இதமான காற்று போக்கியது .எமது காலணியை அவிழ்த்துவிட்டு பாதங்களை மண்ணில் இட்டுசெல்லும்போது. அந்த மண்ணும் ,அதில் வாழும் பூச்சி இனங்களும் ,எம்மை அன்போடு அரவணைத்து கொள்வதை உணர முடிந்தது . ஒரு கிராமத்து மனிதனிற்கு இவை எல்லாம் ஒன்றும் புதிதல்ல .ஆனால் நம் மண்ணின் அடையாளத்தை தொலைத்துவிட்டு ,இந்த நாகரீக உலகில் தனக்கான தேவைகளை மட்டுமே தேடிசெல்லும் இந்த தலைமுறையினருக்கு இவை எல்லாம் சற்று புதியதாகவே தோன்றும் . வேலை முடிந்த பிறகு அனைவரும் அங்குள்ள கிணற்றில் ஆனந்த குளியலிட்டோம்.அங்கு ஏற்பட்ட மகிழ்ச்சியை எழுத்துகளால் விவரிக்க இயலாது .

எங்கள் பயணித்தின் இறுதியாக அங்குள்ள விவசாயிகள் பல பேரை சந்தித்து அவர்களின் தற்போதைய பிரச்சனைகளை பற்றி கேட்டு அறிவதாக இருந்தோம் .ஆனால் அதற்குள் அரசாங்கத்தின் குளிர்பானம் அவர்களை தங்கள் மாயவலைக்குள் இழுத்துக்கொண்டது. பின்னர் எங்களின் அன்றைய களஅனுபவங்களை ஒருவருக்கொருவர் பகிர்ந்துகொண்டோம் . இனி தொடர்ச்சியாக விவசாயிகளுடன் எவ்வாறு இணைந்து செயல்படுவது ,எந்த வகையில் நாம் அவர்களுக்கு உதவ முடியும் என்பனவற்றை பற்றி விவாத்தோம் . எங்களில் பலபேர் அன்றுதான் அறிமுகமாகினோம் என்றாலும் ,அன்று இறுதியில் பலநாள் பழகிய நண்பர்களை பிரிவது போன்ற உணர்வை எங்கள் பயணம் ஏற்படுத்தியது .

வாருங்கள் நண்பர்களே ! அனைவரும் இணைந்து செயலாற்றுவோம் .நாம் செல்ல வேண்டிய தூரம் இன்னும் நெறைய இருக்கிறது .நாம் பிரச்சனைகளை பேசிக்கொண்டே மட்டுமே இருப்பதால் எந்த பலனும் அவர்களுக்கு கிடைத்து விடபோவதில்லை. நாம் அவர்கள் குடும்பத்தில் ஒருவராக இணைந்து செயலாற்றுவோம். நமக்கெல்லாம் உணவளிக்கும் விவசாயத்தையும் ,விவசாயிகளையும் பாதுகாப்போம். இதுநமது சமுதாய பணி அல்ல .சமுதாய கடமை .எந்த தொழில்நுட்ப வளர்ச்சி விவசாயத்தை ,விவசாயிகளை அழித்ததாக சொல்கிறோமோ ,அதே தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மீண்டும் விவசாயத்தில் ஒரு மறுமலர்ச்சியை ஏற்படுத்துவோம்.

Author :

தமிழ்ச் செல்வன்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: